36.7 C
Chennai
Monday, Jul 14, 2025
3 diabetics
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோய் தாக்குவதற்கு இதுதான் முக்கிய காரணமா?தெரிஞ்சிக்கங்க…

தூக்கமின்மை பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அதனால் பலர் பல வகை நோய்களையும் சந்திக்கின்றனர். அதில் முக்கியமாக தூக்கமின்மை நீரிழிவு நோயையும் உருவாக்கும் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகமாக வெளியிடுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை தடுக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை நோய் உருவாகிறது. சரி வாங்க தூக்கமின்மையை எப்படி எதிர்கொள்வது குறித்து பார்க்கலாம்..

ஒவ்வொரு இரவையும் நீங்கள் தூக்கமின்மையால் கழிக்கிறீர்கள் எனில் உங்கள் சர்க்கரை அளவை கண்கானிப்பது நல்லது. குறைந்தது இரவு 7 மணி நேர தூக்கம் அவசியம். அதுதான் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
உங்கள் படுக்கை அறையை எப்போதும் இருள் சூழந்து அமைதியான நிம்மதி தரும் ஒரு இடமாக வைத்துக்கொள்ளுங்கள். தூங்கும் முன் செல்ஃபோன், டிவி, லாப்டாப் என எதையும் பார்க்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் தூக்கத்தை தடுக்கும்.

படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் மன நிலையை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த தூக்கத்திற்கு படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நல்ல குளியல் அல்லது புத்தகம் வாசிக்கலாம். தூங்கும் முன் காஃபி, ஆல்கஹால், புகைப்பழக்கம் கூடாது.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச பிரச்சனையை போக்கும் மீன் எண்ணெய்

nathan

உங்களுக்கு தெரியுமா ஒற்றை தலைவலி என்றால் என்ன?

nathan

முட்டை ஓட்டைக் கொண்டு சொத்தைப் பற்களைப் போக்குவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா வெற்றிலை போடுவதற்கு மிச்சிய மருத்துவம் இல்லை!

nathan

எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? அதிலிருந்து விடுபட இதோ சில வழிகள்…!

nathan

சரும நோய்க்கு சித்த மருந்துகள்

nathan

பதறவைக்கும் இதய நோய்! – ஏன் வருகிறது… என்ன தீர்வு?

nathan

இந்த அறிகுறிகள் தெரிந்தால் காதலில் பிரேக் ஆப் நிச்சயம்.

nathan

தெரிஞ்சிக்கங்க…தாங்க முடியாத தலைவலியா? இதனை எப்படி இயற்கை முறையில் போக்கலாம்?

nathan