பொதுவாக பசும்பாலை விட ஆட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது என்று கூறுவார்கள்.
இதில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது, ஆனால் இதில் பசும்பாலை போல எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை.
அதனால்தான் இது மற்ற பால்களில் இருந்து தனித்துவமாக விளங்குகிறது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்கு வகிக்கின்றது.
அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.
தினமும் ஆட்டுப்பாலை முகத்திலும், சருமத்தின் பிற பாகங்களிலும் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை மீட்டெடுக்கலாம். ஆட்டு பாலை தினமும் இரண்டு, மூன்று முறை கூட முகத்தில் தடவி வரலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தேவையற்ற ரசாயனங்களின் படிமங்களை அகற்ற உதவும்.
சரும எரிச்சல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். தோல் அழற்சி, சரும வறட்சி போன்ற தோல் பிரச்சினைகளை தடுக்க ஆட்டுப்பால் உதவும்.
ஆட்டுப்பாலில் லாக்டிக் அமிலமும் நிறைந்துள்ளது. இது உடலில் படிந்திருக்கும் இறந்த சருமத்தின் மேல் அடுக்கை அகற்ற உதவுகிறது. மேலும் இளமை தோற்றத்தை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கவும் உதவும்.
ஆட்டு பால் சோப் அல்லது ஆட்டு பால் கிளீன்சர் போன்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம். இவை சருமத்தில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறந்து, அதிகப்படியான எண்ணெய்யை வெளியிட உதவும்.
ஆட்டுப்பாலை வறட்சி ஏற்படும் பகுதிகளில் தடவுவது பயனுள்ள தீர்வாக அமையும். ஆட்டு பாலில் உள்ள கொழுப்பு அமிலம் சருமத்தில் உள்ள நீர்ச்சத்தை மீட்டெடுக்கவும், தக்க வைக்கவும் உதவும்.