27 C
Chennai
Thursday, Nov 14, 2024
9 malabar avial
சமையல் குறிப்புகள்

சுவையான மலபார் அவியல்

மலபார் அவியல் மிகவும் பிரபலமான கேரளா சைடு டிஷ். இந்த அவியல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் இதில் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதால், இதன் சுவை அலாதியாக இருப்பதுடன், ஆரோக்கியமான ரெசிபியாகவும் உள்ளது.

இங்கு கேரளா ரெசிபியான மலபார் அவியலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Malabar Avial
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1 (நீளமாக நறுக்கியது)
கேரட் – 1 (நீளமாக நறுக்கியது)
பீன்ஸ் – 6 (நீளமாக நறுக்கியது)
வாழைக்காய் – 1 (தோல் நீக்கி நீளமாக நறுக்கியது)
கத்திரிக்காய் – 1 (நீளமாக நறுக்கியது)
வெள்ளை பூசணி – 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/2 கப்
கெட்டியான தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 3-4
சீரகம் – 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

தண்ணீர் வற்றி காய்கறிகளானது வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, அவியலுடன் சேர்த்தால், மலபார் அவியல் ரெடி!!!

Related posts

சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட்

nathan

தக்காளி வெங்காய சாம்பார்

nathan

சுவையான கடாய் காளான் கிரேவி

nathan

இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி!ஆஹா பிரமாதம்

nathan

சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார்

nathan

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

nathan

மட்டன் கைமா கிரேவி

nathan

சூப்பரான வெங்காய போண்டா

nathan