25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pic
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு பல் கூச்சம் அதிகமாக இருக்கா?இதோ எளிய நிவாரணம்

பொதுவாக பல் கூச்சம் என்பது பெரிய பிரச்னையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்வின் இயல்பை முற்றிலுமாக பாதிக்கும். குறிப்பாக இயல்பாக பேச முடியாது. வாயில் காற்று நுழைந்தால் கூட அசௌகர்யம் ஏற்படும்.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. ஆனால் முக்கிய காரணம் பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கு பாதிப்பல் உடைந்திருக்கும் பட்சத்தில் கூச்சம் ஏற்படும்.

 

இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம். ஒரு வேளை ஏற்கெனவே பல் சொத்தை ஏற்பட்டு, அந்த சொத்தையை சில அடைத்திருப்பார்கள்.

அந்த அடைப்பு உடைந்திருந்தால் கூட கூச்சம் ஏற்படலாம். இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லதாகும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.

1/2 டீ ஸ்பூன் உப்பை மற்றும் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். இதை வாயில் ஊற்றி 30 விநாடிகள் வைத்து கொப்பளியுங்கள்.

1 டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு வாயை கொப்பளித்து வாருங்கள். இது சென்ஸிடிவ் பற்களில் உள்ள வலியை போக்க உதவுகிறது.
மஞ்சளைக் கொண்டு பற்களை மசாஜ் செய்து வரலாம். 1 டீ ஸ்பூன் மஞ்சள், அதில் 1/2 டீ ஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீ ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பற்கள் மற்றும் ஈறுகளில் அப்ளே செய்து வாருங்கள் இதை இரண்டு முறை செய்து வருவது பற்களில் உள்ள வலியை போக்க உதவுகிறது.

க்ரீன் டீயை மவுத்வாஷாக கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை என வாயை கொப்பளித்து வரலாம். இது பற்களை வலிமைப்படுத்தவும் அழற்சியை குறைக்க பயன்படுகிறது.

வெனீலா சாற்றில் இருந்து சில துளிகள் எடுத்து அதை காட்டன் பஞ்சில் நனைத்து 3-5 நிமிடங்கள் சென்ஸிடிவ் ஈறுகளில் வைக்க வேண்டும். இது சென்ஸிடிவ் பற்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

Related posts

பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்க வேண்டியவை, இருக்கக் கூடாதவை!

nathan

கட்டிகளால் கவலை வேண்டாம்!மருத்துவர் கூறும் தகவல்கள்…

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை

nathan

25 வயதை அடைந்த பெண்களா நீங்கள்..??அப்ப நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

nathan

தனிமையில் வாழ்ந்தால் தவறுகள் புரியும்

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பத்தை உறுதி செய்ய எளிய வழிமுறைகள்!

nathan

மாதவிடாய் சுழற்சி மாறினால் மருத்துவரை அணுக வேண்டும்

nathan

இதயநோய் வராமல் தடுக்கும் சீதாப்பழம்

nathan

மூலிகை இல்லம் – 12 பார்வையை கூர்மையாக்கும் ஜூஸ்!

nathan