25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
17 1447744498 7 honey5
முகப் பராமரிப்பு

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!!!

சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். முகத்தில் குழிகள் இருந்தால், அவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருதற்கு வழிவகுக்கும். மேலும் யாருக்கு முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதோ, அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும்.

அதற்காக கவலைப்பட வேண்டாம். இப்பிரச்சனை இருந்தால், அதனை ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகள் மூலம் சரிசெய்யலாம். அந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டால், முகத்தில் உள்ள குழிகள் மறைவதோடு, முகத்தின் பொலிவும் அதிகரிக்கும். சரி, இப்போது முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைய வைக்கும் அந்த ஃபேஸ் மாஸ்க்குகள் என்னவென்று பார்ப்போம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

பப்பாளி

பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

தக்காளி

உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

கடலை மாவு

கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.

பாதாம் பேஸ்ட்

பாதாமில் வைட்டமின் ஈ ஏராளமாக நிறைந்துள்ளது. இது திறந்துள்ள சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

தேன் மற்றும் சர்க்கரை

தேன் மற்றும் சர்க்கரை கூட சருமத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க உதவும். அதிலும் தேன் சிறந்த டோனர் மட்டுமின்றி, சருமத்துளைகளை இறுக்கும். அத்தகைய தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.17 1447744498 7 honey5

Related posts

பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

nathan

கடலை மா முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

nathan

மஞ்சள் பேக் போடுவதால் அதிகரிக்கும் முக அழகை கவனித்துள்ளீர்களா?

nathan

முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

nathan

உங்க வறண்ட சருமத்தை பிரகாசமாக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

உங்க கண்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டுமா…?இதை முயன்று பாருங்கள்

nathan

ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்………

nathan

அடுக்களையிலேயே அழகாகலாம்! – 2

nathan

முகத்தின் அழகை தக்க வைக்க நாம் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது அவற்றை பார்ப்போம்.

nathan