27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
recipe1 0
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளையாக வெள்ளரிக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க…

வெளியே சென்றாலே, வெயில் சுட்டெரிப்பது போல் கொளுத்திக் கொண்டிருக்கிறது. கோடைக்காலத்தின் ஆரம்பத்திலேயே இப்படி இருந்தால், போகப் போக எப்படி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். கோடையில் விலைக் குறைவில் கிடைக்கும் நீர்ச்சத்துள்ள ஓர் உணவுப் பொருள் தான் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டால், உடல் வறட்சி அடையாமல் நீர்ச்சத்துடன் இருக்கும். அதையே கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

ஏனெனில் வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, பொட்டாசியம், சிலிகா, சல்பர் மற்றும் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளன. இது சருமத்திற்கு குளிர்ச்சியையும் தரக்கூடியது. அதோடு வெள்ளரிக்காயில் ப்ளீச்சிங் பண்புகளும் உள்ளன. இதனால் இதைக் கொண்டு வெயில் காலத்தில் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் கருமையடைவதையும் தடுக்கலாம். எண்ணெய் பசை சருமத்தினர் வெள்ளரிக்காயைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை குறையும்.

மேலும் வெள்ளரிக்காயில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுத்து, இளமையைத் தக்க வைக்கும். முக்கியமாக வெள்ளரிக்காய் அனைத்து வகையினருக்கும் ஏற்றது. சரி, இப்போது அந்த வெள்ளரிக்காயைக் கொண்டு எப்படியெல்லாம் சருமத்திற்கு மாஸ்க் போடலாம் என்று காண்போம்.

வெள்ளரிக்காய், இளநீர் மற்றும் பால் பேக்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 2 டேபிள் ஸ்பூன் இளநீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி பேக்

வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்குவதற்கான சிறந்த ஃபேஸ் பேக் தான் இது. அதற்கு வெள்ளரிக்காய் சாறு மற்றும் தக்காளி சாற்றினை சரிசம அளவில் எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் முல்தானி மெட்டி பவுடரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய், பால் பவுடர் மற்றும் தயிர் பேக்

வெள்ளரிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளை சுத்தமாகி, இறுக்கமடைந்து, மீண்டும் சருமத் துளைகளுள் அழுக்குகள் போகாமல் இருக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்திக் காட்டும். அதற்கு 1/2 வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 2-3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய், முட்டை வெள்ளைக்கரு, சோள மாவு பேக்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவிவிட்டு, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இச்செயலால் சருமத் துளைகள் சுத்தமாகி, சருமத் துளைகளும் இறுக்கமடையும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள் பேக்

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை நீரால் கழுவ வேண்டும். இச்செயலால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

வெள்ளரிக்காய், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை பேக்

இந்த ஃபேஸ் பேக் டோனர் போன்றும் செயல்படும். அதற்கு வெள்ளரிக்காய் சாறு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காண முடியும்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர் பேக்

வெள்ளரிக்காய் கூழ் மற்றும் தயிரை சரிசம அளவில் ஒரு பௌலில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கும் டோனர் போன்று சரும நிறத்தை உடனடியாக மேம்படுத்திக் காட்டும். மேலும் இந்த பேக் முகத்தை பிரகாசமாக காட்டும்.

வெள்ளரிக்காய் புதினா பேக்

1/2 வெள்ளரிக்காய், 1 முட்டையின் வெள்ளைக்கரு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த அல்லது நற்பதமான புதினா இலைகள் ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கெள்ள வேண்டும். பின் அதை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அதன் பின் அக்கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

வெள்ளரிக்காய் மற்றும் வினிகர் பேக்

ஒரு பௌல்ல 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் புதினா சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் வினிகர் சர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கினால், சரும பொலிவு மேம்படுவதோடு, சருமமும் மென்மையாகும்.

Related posts

சருமப் பராமரிப்பு

nathan

உங்களுக்கு தெரியுமா படை நோய்க்கு சிறந்த மருத்துவ குறிப்பு..

nathan

உங்கள் கழுத்து கருத்துள்ள‍தா? கவலையை விடுங்க!

nathan

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

வெட்டிவேரை சேர்த்து குளிர வைத்து பிறகு வடிகட்டி கொள்ளவும். முகத்தை சுத்தம் செய்ததும் வெட்டிவேர் ஸ்ப்ரே செய்துகொள்ளவும்..

nathan

சரும பிரச்சனைகளை போக்கும் ஆப்பிள் பேஸ் பேக்

nathan

உங்கள் சருமத்தை பளபளக்க ஆரஞ்சு தோல்.. beauty tips..

nathan

அழகுக்கலை வல்லுனர்களால் மட்டுமே சில விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்

nathan

ஒரே வாரத்தில் முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

nathan