மூலிகைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான இந்திய மூலிகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவை. அதேப்போல் மூலிகைகள் பல சரும நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
அதற்கு மூலிகைகளை அரைத்து சருமத்தில் தடவி பயன் பெறலாம் அல்லது அவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து ஊற வைத்து குளிக்கலாம். இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவையும் நீங்கும்.
சீமைச்சாமந்தி பூ
சீமைச்சாமந்தி பூசை குளிக்கும் நீரில் ஊற வைத்து குளிப்பதன் மூலம், சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களைத் தடுத்து சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
புதினா
உடல் சூடு அதிகமாக இருந்து, அதனைத் தணிப்பதற்கு பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்காவிட்டால், குளிக்கும் நீரில் புதினாவை சேர்த்து ஊற வைத்துக் குளியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை குறையும்.
பார்ஸ்லி
உங்களுக்கு அழகான சருமம் வேண்டுமா? அப்படியெனில் ஒரு கையளவு பார்ஸ்லியை குளிக்கும் டப் நீரில் போட்டு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, அந்நீரினுள் 20 நிமிடம் அமருங்கள். இதனால் சருமத்தின் நிறம் தானாக அதிகரிக்கும்.
துளசி
துளசியையும் குளிக்கும் நீரில் சேர்த்து குளிக்கலாம். குறிப்பாக இந்த மூலிகை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. துளசியில் உள்ள மருத்துவ பொருட்கள், சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் அரிப்புக்களை சரிசெய்யும்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி மூலிகையின் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் உடலில் இருந்து வியர்வை துர்நாற்றம் அதிகம் வீசினால், குளிக்கும் நீரில் ரோஸ்மேரியை சேர்த்து குளியுங்கள். இதனால் உடல் துர்நாற்றம் நீங்கும்.
சேஜ்
சேஜ் என்னும் மூலிகையை குளிக்கும் நீரில் சேர்த்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் சேஜ் மூலிகை குளியல் முகப்பருவைப் போக்கும்.
தைம்
தைம் மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. இந்த மூலிகையைக் கொண்டு வாரம் ஒரு முறை குளியல் மேற்கொண்டால், அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் குணமாகும். மேலும் தைம் தலைவலி பிரச்சனை இருந்தாலும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.