29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
31b779dddb88
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு அல்சர் இருக்க? அது விரைவில் குணமாக வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

நமது உணவுக்குழாயின் உணவு பாதையில் உண்டாகும் புண்களை அல்சர் என்று சொல் கிறோம், சிறுகுடலின் முன்பகுதியில் உட்சுவரில் உருவாகும் புண்களும் அல்சர் தான்.

அல்சர் ஏற்பட்டால், வயிற்றில் வீக்கம் அல்லது வயிறு நிரம்பியது போன்ற உணர்வு, நெஞ்சு எரிச்சல், குமட்டல், நெஞ்சு வலி, எடை குறைதல் உட்பட பல அறிகுறிகள் ஏற்படுகின்றன.

 

அல்சர் என்பவை உடலில் எங்கு வேண்டுமானாலும் வரக்கூடிய புண்கள்.

 

உடலில் வெளியே தெரியக்கூடிய புண்களை விட உள்ளே பொதுவாக வயிற்றின் உட்பகுதியில் குடலில் வரக்கூடிய புண்கள் பெப்டிக் அல்சர் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புண்களை கவனிக்காவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

 

இதனை கட்டுப்படுத்த ஒரு சில பழங்கள் உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 

ஸ்ட்ராபெர்ரியில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலை அல்சரில் இருந்து பாதுகாக்கிறது. இது தவிர, இது வயிற்றுச் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது. எனவே அல்சர் குணமாக தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை மதிய வேளையில் சாப்பிடுங்கள்.

ஆப்பிள் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். மேலும் ஆப்பிளில் ஆப்பிளில் எச்.பைலோரியின் வளர்ச்சியைத் தடுக்கும் ஃபிளாவோனாய்டுகள் உள்ளன. ஆகவே அல்சர் இருக்கும் போது ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் அல்சர் குணமாகும்.

ப்ளூபெர்ரியை காலையில் எழுந்ததும் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணைக் கட்டுப்படுத்த உதவும். இவற்றை உண்ணும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும் மற்றும் அல்சரில் இருந்து விரைவில் குணமாக உதவும்.

மாதுளை ஜூஸை குடிப்பது வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் எரிச்சலைக் குணப்படுத்தும். அதுவும் ஒவ்வொரு வேளை உணவு உண்ட ஒரு மணிநேரம் கழித்து சிறிது மாதுளையை அதன் மஞ்சள் தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண்கள் விரைவில் குணமாகுமாம்.

முலாம் பழத்தில் உள்ள நீர்ச்சத்து மற்றும் குளிர்விக்கும் தன்மை குடல் பிரச்சனைகளை சரிசெய்வதுடன், அல்சரையும் குணப்படுத்த உதவுகிறது.

பலாப்பழத்தில் அல்சரேட்டிவ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இவை அல்சரைக் குணப்படுத்தவும், வயிறு தொடர்பான பிரச்சனைகள சரிசெய்யவும் உதவுகின்றது.

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, புண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடியவை. எனவே அல்சர் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால், விரைவில் வயிற்றுப் புண்களில் இருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் ஹைப்பர் அசிடிட்டி, அல்சர் மற்றும் பிற இரத்தம் தொடர்பான கோளாறுகளை குணப்படுத்துகிறது

Related posts

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகப் பிரசவத்திற்கான சுகமான குறிப்புகள்!

nathan

கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்

nathan

தோல் நோய் குணமாக…

nathan

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்

nathan

சர்க்கரையை வெல்லலாம் ஸ்வீட் எஸ்கேப் – 4

nathan

உங்க கிட்னியில் கற்கள் உருவாக இருக்கணுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!

nathan