29 C
Chennai
Saturday, Jun 29, 2024
15 1436945702 karaikudi egg curry
அசைவ வகைகள்

காரைக்குடி முட்டை குழம்பு

இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காரைக்குடி முட்டை குழம்பு காரமாக இருப்பதோடு, நல்ல ருசியோடு இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது காரைக்குடி முட்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

<
15 1436945702 karaikudi egg curry
தேவையான பொருட்கள்:

முட்டை – 5
சின்ன வெங்காயம் – 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை நீரில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி, முட்டை ஓட்டை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.

பின் அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, இறுதியில் முட்டையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி முட்டைக் குழம்பு ரெடி!!!

Related posts

கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

nathan

முந்திரி சிக்கன் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

இடுப்பில் இருக்கும் கருமை நிற‌ தழும்புகள் மறைந்து அழகாக . . .

nathan

இறால் கறி

nathan

சுவையான நெத்திலி மாங்காய் குழம்பு

nathan

சிக்கன் தால் ரெசிபி

nathan

தலபாக்கட்டி மட்டன் பிரியாணி: சுலபமான முறை

nathan