26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
28 1438081281 amlajuice
பழரச வகைகள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்

இதுவரை நெல்லிக்காய் ஜூஸ் என்றால், நெல்லிக்காயை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, சாற்றினை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து தான் குடித்திருப்பீர்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமான சுவையுடைய நெல்லிக்காய் ஜூஸ் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்முறையில் இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்வதால், இது பல்வேறு ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான பானம். சரி, இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 7
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி – 1 இன்ச்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
தேன் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் நெல்லிக்காயை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தண்ணீரைத் தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறினால், நெல்லிக்காய் ஜூஸ் ரெடி!

குறிப்பு:

இந்த வடிகட்டிய நெல்லிக்காய் சாற்றினை காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

28 1438081281 amlajuice

Related posts

ஃப்ரூட் டெஸர்ட்

nathan

சுவையான தேங்காய் பால் ஸ்வீட் கீர்

nathan

மாங்காய் லஸ்ஸி

nathan

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

பாதாம் கீர்

nathan

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

nathan

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

கோல்ட் காஃபீ

nathan