29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
m tamil
மருத்துவ குறிப்பு

வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும். சர்க்கரை வியாதி என்பது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டால் சர்க்கரை வியாதி ஏற்படும். சர்க்கரை நோய் வருவதற்கு நமது மாறிவரும் வாழ்க்கை முறையே மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.

அதுவும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையுடன், உயர் கலோரி உணவுகளையும் உண்ணும் போது, சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கிறது.

ஒருவரது ஆரோக்கியமான வாழ்வில் உணவும், வாழ்க்கை முறையும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதைத் தவிர, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் பானங்களைக் குடித்து வரலாம்.

தற்போது சர்க்கரை நோய் வராமல் இருக்க குடிக்க வேண்டிய பானங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பாகற்காய் ஜூஸில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சாரன்டின் என்னும் செயலில் உள்ள பொருள் உள்ளது. அதிலும் ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக்க மற்றும் நிர்வகிக்க பெரிதும் உதவும்.
தினமும் பத்து கிராம் வெந்தய விதையை சுடுநீரில் ஊற வைத்து, நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். வெந்தய நீருக்கு சர்க்கரை நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது.
பார்லி நீரில் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லி நீரில் இனிப்பு எதுவும் சேர்க்காமல் குடியுங்கள். மேலும் பார்லி நீரில் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது பல நோய்களைத் தடுக்க உதவுகிறது.
க்ரீன் டீ க்ளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது. சர்க்கரை நோயை நிர்வகிப்பதில் க்ரீன் டீ பயனுள்ளதாக இருக்கும்.
5 வெண்டைக்காயை நன்கு கழுவி, அதன் முனைகளை நீக்கிவிட்டு, இரண்டாக வெட்டி, ஒரு நீளமான டம்ளரில் போட்டு, அதில் நீரை நிரப்பி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.

Related posts

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…

sangika

தெரிஞ்சிக்கங்க…விலகிப் போன முதுகெலும்பில் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு பயனுள்ள ஆசனம்!

nathan

இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா…? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை! இதை முயன்று பாருங்கள்!..

nathan

கரப்பான் என்றால் பயமா?

nathan

மூக்கடைப்பு பிரச்சனையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய வெட்டிவேரின் மகத்துவம்

nathan

மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி

nathan