22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
Tamil News Personal loan for
அழகு குறிப்புகள்

தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை- தெரிந்துகொள்வோமா?

பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் படிப்புக்கு பின்னர் எந்த வேலைக்கு செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு என்னால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. சுயமாக தொழில் தொடங்கி முன்னேறுவதுதான் ஒரே குறிக்கோள் என்று கூறுவது உண்டு. சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால் எண்ணமும், படித்து வாங்கிய பட்டங்களும் வெற்றிகரமான தொழிலை அமைத்து தருவது இல்லை.உங்களது முதலீடு தொழில்நுட்ப அறிவு, போட்டியாளர்கள் ஆதிக்கம் என்று சந்தை நிலவரங்களை முழுமையாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

நீங்கள் மேற்கொள்ள போகும் தொழிலுக்கு உங்களது சுய முதலீடு போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். தேவைப்படும் பணத்தை எந்த வழியில் திரட்டலாம் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். வங்கிகளில் கடன் வாங்குவது அல்லது கூட்டாளிகளை கூடுதலாக சேர்ப்பது என்று சில வழிகளை மேற்கொண்டு தொழிலுக்கு தேவைப்படும் நிதியை திரட்ட முடியும். சுயமாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள், தங்களது தொழிலை வெற்றிகரமாக நடத்தி முன்னேற்றம் அடைய பின்வரும் குணங்களை பெற்றிருக்க வேண்டும்.

* எல்லா தொழிலுமே வாடிக்கையாளர்களை நம்பித்தான் இயங்குகிறது. உங்களது சேவை வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் விதமாக அமைய வேண்டும். சிறிய முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்கள் பெரும்பாலும் நேரடியாக வாடிக்கையாளர்களை சந்தித்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் விதத்தில் அமைந்திருக்கும். தொழிலில் நாணயம் மிக அவசியம். வாடிக்கையாளர்களையும் கவர்ந்து இழுக்கலாம்.

* தொழிலை தொடங்குவதற்கு பிள்ளையார் சுழி போடுவது முதல் சிறப்பாக செயல்பட வைப்பது வரை பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். நிதி நெருக்கடி, போட்டியாளர்களின் விலை குறைப்பு, தொழிலாளர் பிரச்சினை, கச்சாப்பொருள் தட்டுப்பாடு, எந்திர கோளாறு, திடீர் விற்பனை சரிவு, விபத்து… என்று பிரச்சினைகள் அடுக்கடுக்காக உருவாகலாம். தொழில்கள் என்றால் இடர்கள் இல்லாமல் இருப்பதில்லை. அனைத்தையும் சமாளிக்கும் மன உறுதி தொழில் புரிபவர்களுக்கு அவசியம் தேவை.

* செய்யப்போகும் தொழி லைப்பற்றி அ.. ஆ… கூட தெரியாமல் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. வியாபார நுணுக்கங்கள், சூட்சமங்களை தெரிந்து கொள்ள நீங்கள் செய்யப்போகும் தொழிலில் முன் அனுபவம் அவசியம் தேவை. அனைத்து வியாபார உத்திகளையும் அறிந்து கொண்ட பின்பு நீங்கள் தொழிலை ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.

* சாமர்த்தியமான பேச்சு தொழில் முனைவோர்களுக்கு அவசியம் தேவை. பணியாளர்களை பணி செய்ய தூண்டவும், வாடிக்கையாளர்களை கவரவும், சாமர்த்தியமான பேச்சும், அணுகு முறையும் மிகவும் அவசியம்.

* எந்த பொருட்களை உற்பத்தி செய்தாலும் காலத்துக்கு தகுந்தபடி அதனை மாற்றியமைப்பது மிகவும் முக்கியம். தாத்தா காலத்தில் எப்படி இருந்ததோ, அதே மாதிரி இப்போதும் இருந்தால் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியாது. காலத்துக்கு தகுந்தபடி புதிய கருவிகளை பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை புகுத்துதல், கவர்ச்சிகரமான பேக்கிங்… என்று பல்வேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Courtesy: MalaiMalar

Related posts

சின்ன சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!

nathan

சன்ஸ்கிரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

nathan

சூரியகாந்தி எண்ணெயை தோல், முடி மற்றும் சருமத்திற்கு 11 சிறந்த நன்மைகள்

nathan

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

nathan

இரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஜூஸ் உதவுகிறது!…

sangika

உரோமத்தை நீக்கும் முறைகள்!..

sangika

சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம். அதை எந்த வெளிப்பூச்சாலும் சிகிச்சையாலும் தர முடியாது..

nathan

இயற்கை பருத்தி சேலைகள்

nathan