கொழுப்பு என்றதும் பலர் கெட்டது என்று தான் சொல்வோம். ஆனால் உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்புக்களானது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்பில் சாச்சுரேட்டட், அன்-சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் என அதன் பாகுபாடுகள் நீண்டுக் கொண்டே போகிறது. இதில் எது நல்லது எது கேட்டது என ஆராய்வது கொஞ்சம் கடினம். நீங்கள் தினசரி உட்கொள்ளும் உணவில் இதில் ஏதேனும் ஒருவகையின் கொழுப்பு இல்லாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. இதில் எது நல்லது எது கெட்டது என்பது தான் தற்போதைய கேள்வி.
நமது உடலுக்கு சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும் தேவைப்படுகிறது மற்றும் அன்-சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும் தேவைப்படுகிறது. இதில் நீங்கள் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு அளவு தேவை என்பதே. ஏனெனில் சாச்சுரேட்டட் மற்றும் அன்-சாச்சுரேட்டட் இரண்டிலும் நன்மை மற்றும் தீமையின் அளவுகள் வேறுப்பட்டு இருக்கின்றனர்.
சாச்சுரேட்டட் கொழுப்பில் தீமைகள் அதிகம் ஆயினும் அவசியமே. அன்-சாச்சுரேட்டட் கொழுப்பில் நன்மைகள் அதிகம் ஆயினும் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து. இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை நீங்கள் தெரிந்துக் கொண்டாலே போதுமானது. அதற்கு நீங்கள் எந்த உணவுப் பொருள் வாங்கும் போதும் அதில் என்ன வகை கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என அறிந்து வாங்க வேண்டும்…
ஆரோக்கியம் – சாச்சுரேட்டட் கொழுப்பு
சாச்சுரேட்டட் கொழுப்பில் 10% தான் கலோரி உள்ளது. எனவே, இதை அதிகம் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
ஆரோக்கியம் – அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு
அன்-சாச்சுரேட்டட் கொழுப்பில் 3௦% கலோரி உள்ளது. எனவே, முடிந்த வரை அன்-சாச்சுரேட்டட் கொழுப்பை சேர்த்துக் கொள்வது உடல்நலத்தை பாதுகாக்கும்.
உடல் எடை – சாச்சுரேட்டட் கொழுப்பு
கலோரி அளவு குறைவாகவும் கொழுப்பின் அளவு மிகுதியாகவும் இருப்பதால், சாச்சுரேட்டட் கொழுப்பு உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.
உடல் எடை – அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு
அன்-சாச்சுரேட்டட் கொழுப்பில் கலோரிகள் அதிகமாகவும், கொழுப்பு சற்று குறைவாகவும் இருப்பதால், அவ்வளவாக உடல் எடை அதிகரிக்காது.
இதயம் – சாச்சுரேட்டட் கொழுப்பு
சாச்சுரேட்டட் கொழுப்பு எல்.டி.எல். கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இது இதயத்திற்கு கேடு விளைவிக்கும். வெள்ளை சர்க்கரை மற்றும் மைதா மாவில் இது அதிகமாக இருக்கிறது.
இதயம் – அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு
அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு எச்.டி.எல். கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது. இது இதய நலத்தை பாதுகாக்கும். ஆலிவ் எண்ணெய், சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றில் இது அதிகமாக இருக்கிறது.
உணவுப் பொருள்கள் – சாச்சுரேட்டட் கொழுப்பு
வெண்ணெய், தேங்காய் எண்ணெய், இறைச்சி, சீஸ், தேங்காய், சாக்லேட், நட்ஸ், வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ளது.
உணவுப் பொருள்கள் – அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு
அவகேடோ, சோயாபீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் , மீன், ஆளி விதை போன்ற உணவுகளில் அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக இருக்கிறது.
கெட்டுப் போகும் தன்மை – சாச்சுரேட்டட் கொழுப்பு
சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் அவ்வளவு சீக்கிரம் கெட்டு போகாது. பல உணவகங்களில் உணவு அதிக நேரம் கெட்டு போகாமல் இருக்க கூடாது என சாச்சுரேட்டட் கொழுப்பு எண்ணெய்யை தான் பயன்படுத்துகின்றனர். இது உங்கள் உடல்நலத்தை பாதிக்கும்.
கெட்டுப் போகும் தன்மை – அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு
அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் சீக்கிரம் கெட்டு போய்விடும்
செரிமானம் – சாச்சுரேட்டட் கொழுப்பு
சாச்சுரேட்டட் கொழுப்பு அவ்வளவு சீக்கிரம் கரையாது. எனவே செரிமானத்திற்கு இடையூறாக இருக்கும்.
செரிமானம் – அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு
அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு எளிதில் கரைந்துவிடும். எனவே, செரிமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது.