சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.
1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம்.
2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.
3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
4. உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்களில் சிலருக்கு சருமம் சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இத்தகைய சரும அழற்சிக்கு பூண்டுவை நசுக்கி சருமத்தில் தடவி வரலாம்.
5. வயதாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் இளம் வயதிலேயே நிறைய பேர் சரும சுருக்க பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். காலையில் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பூண்டு சாறை கலந்து பருகி வந்தால் முகத்தில் சுருக்கங்கள் தோன்றாது. இளமையை பாதுகாக்கும் தன்மையும் பூண்டுக்கு இருக்கிறது.
Courtesy: MalaiMalar