26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
upperliphair
சரும பராமரிப்பு

ஒரே வாரத்தில் உதட்டிற்கு மேல் அசிங்கமாக வளரும் முடியை நீக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேல் அசிங்கமாக முடி வளர்கிறதா? கவலையை விடுங்கள். உங்களது அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தளம் ஒரு நல்ல தீர்வை வழங்கும்.

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் உதட்டிற்கு மேலே மீசைப் போன்று முடி வளர்வது. பெண்களுக்கு உதட்டிற்கு மேலே முடி வளர்ந்தால், அது அப்பெண்ணின் தோற்றத்தை விசித்திரமாக காட்டுவதால், பலர் அப்பெண்ணையே கூர்ந்து கவனிப்பார்கள். இதுவே பல பெண்களுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும். பெண்களுக்கு இம்மாதிரி உதட்டிற்கு மேலே முடி வளர்வதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம்.

பல பெண்கள் உதட்டிற்கு மேலே வளரும் முடியை நீக்க அழகு நிலையங்களுக்குச் சென்று த்ரெட்டிங் செய்வார்கள். ஆனால் இப்படி த்ரெட்டிங் செய்வதால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். மேலும் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க பல அழகு சாதனப் பொருட்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து பொருட்களுமே உதட்டின் மேல் பகுதியில் உள்ள முடியைப் போக்காது. ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு உதட்டின் மேல் வளரும் முடியைப் போக்கலாம்.

இக்கட்டுரையில் உதட்டிற்கு மேலே மீசைப் போன்று வளரும் முடியைப் போக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்கள் என்னவென்று தெரிந்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

கடலை மாவு

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை உதட்டிற்கு மேலே தடவி நன்கு காய வைக்க வேண்டும். கலவை நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக மேல் நோக்கியவாறு ஸ்கரப் செய்ய வேண்டும். இறுதியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேலே வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு உதட்டிற்கு மேலே வளரும் முடியை நீக்கப் பயன்படுகிறது மற்றும் இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவுகிறது. ஆகவே ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேல் பகுதியில் தடலி, 15-20 நிமிடம் நன்கு உலர வைக்க வேண்டும். பின் முடி வளரும் எதிர் திசையை நோக்கி உரித்து எடுத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் சர்க்கரை

தேன் மற்றும் சர்க்கரை வேக்ஸிங் பொருட்கள் போன்று செயல்படும். இது சருமம் வறட்சி அடையாமல் தடுத்து, சருமத்திற்கு நீர்ச்சத்தை வழங்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு எடுத்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடேற்ற வேண்டும். பின் அதை இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் ஏஜென்ட் போன்று செயல்படும்.

பின் தயாரித்து வைத்துள்ள கலவையை உதட்டிற்கு மேலே தடவி, அதன் மேலே வேக்ஸிங் ஸ்ட்ரிப் அல்லது காட்டன் துணியை வைத்து, பின் உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ஹேர் ப்ளீச்சிங் ஏஜென்ட் போன்று செயல்படும் மற்றும் சருமத்துளைகளை மூடச் செய்து, முடியை நீக்க உதவியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

* உருளைக்கிழங்கு சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இரவு தூங்கும் முன் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உருளைக்கிழங்கு ஜூஸ், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், உதட்டிற்கு மேலே முடி வளர்வதைத் தடுக்கும்.

சோள மாவு மற்றும் பால்

சோள மாவு மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேலே தடவி வேகமாக உரித்து எடுத்தால், உதட்டிற்கு மேலே வளரும் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:

* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* பால் – 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் சோள மாவு மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை உதட்டிற்கு மேலே தடவி நன்கு காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முடியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள்

பழங்காலம் முதலாக பின்பற்றப்பட்டு வரும் ஓர் வழி தான் இது. மஞ்சள் சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கும்.

அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை என சில வாரங்கள் பின்பற்ற வேண்டும். இதனால் முகத்தில் வளரும் தேவையற்ற முடி நீங்கி, முகம் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவலாம். இதனால் ஒட்டுமொத்த முகத்தில் உள்ள முடியின் வளர்ச்சியும் தடுக்கப்படும்.

Related posts

உங்கள் உடல் வலிக்கும் மற்றும் நிம்மதியான உறக்கத்திற்கும் பாடி மசாஜ்

nathan

சருமம் காக்கும் சரக்கொன்றை…

nathan

2 ஸ்பூன் எலுமிச்சை சாறினால் உங்கள் அழகை எப்படி மேம்படுத்தலாம்?

nathan

முப்பது வயதுகளில் அழகை பாதுகாப்பது எப்படி ?

nathan

எச்சரிக்கைப் பதிவு!! வலியில் துடிக்க வைத்த மருதாணி அலங்காரம்!

nathan

கழுத்தில் அசிங்கமாக இருக்கும் கருமையை போக்க இதை யூஸ் முயன்று பாருங்கள்!

nathan

வெயிலில் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!!!

nathan

சரும நிறம் மாறி பளீச் அழகு பெற…..

nathan

மகத்துவமான மருதாணி:

nathan