28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
60324
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… வெறும் நான்கு ஸ்பூன் வெந்தயம்: நீரிழிவு நோயாளிகளுக்கு அரங்கேறும் அற்புதம்

வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். மேலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

அதுமட்டுமின்றி வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது.

மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.

இதனை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் பலன்கள் இன்னும் இரட்டிப்பாகும். தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம்? இதன் நன்மைகள் என்னெ்னன என்பதை பார்ப்போம்.

எப்படி எடுத்து கொள்ளலாம்?
4 ஸ்பூன் வெந்தையத்தை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பிறகு 1 கப் தண்ணீர் எடுத்து ஊற வைத்து கொள்ளவும். இது இரவு முழுவதும் ஊற விட வேண்டும். 12 நேரம் ஊறினால் போதும். தண்ணீரை வடிக்கட்டிய பிறகு 1 அல்லது 2 நாட்கள் அப்படியே முடி வைக்கவும்.

முளைக்கட்டிய பின் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க. மதிய நேரம் சாப்பாட்டிற்கு முன் இதில் 1 ஸ்பூன் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது.

நன்மைகள்
இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரதசமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
சிறுநீரகம் நன்றாக செயற்பட உதவும்.
செரிமான பிரச்சினையும் தீர்க்க உதவும்.
மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்யும்.
உடல் எடை, வயிற்று கொழுப்பு, தொப்பை போன்றவற்றை குறைக்கும்.
அஜீரணம் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி போன்றவற்றை சரி செய்யும்.
குறிப்பு
கர்ப்பிணி பெண்கள் மட்டும் இதனை உட் கொள்வதை தவிர்க்கவும்.

Related posts

கடுகு எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

nathan

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா?தெரிந்துகொள்வோமா?

nathan

பித்தப்பை கற்களுக்குத் தீர்வு

nathan

தாய்மைப்பேறு அடைய ஆயுர்வேத மருத்துவம்!

nathan

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

nathan

உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றி வீக்கங்களை போக்க நாட்டு வைத்தியங்கள்.இதை படிங்க…

nathan

உங்களுக்கு தெருயுமா வயிற்றில் கொழுப்பை தங்கி தொப்பையை உண்டாக்கும் 12 பழக்கவழக்கங்கள்!!!

nathan

பல் வலிக்கு வீட்டில் இருக்கு மருந்து

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் அதன் பயன்களும்…!!

nathan