28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dfef4617 f402 46e7 928f 5760f2908eb1 S secvpf
சைவம்

மிளகு காளான் வறுவல்

தேவையான பொருள்கள் :

பட்டர் காளான் – 250 கிராம்
பூண்டுப்பல் – 10
மிளகுத்தூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* காளானை நன்கு சுத்தப்படுத்தி நீள வாக்கில் நறுக்கவும்.

* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.

* பிறகு அதனுடன் காளானை சேர்த்து நன்கு கிளறவும்.

* காளான் வேகும் வரை இடை இடையே கிளறி கொண்டே இருக்கவும். * காளான் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.

* சுவையான மிளகு காளான் ரெடி.
dfef4617 f402 46e7 928f 5760f2908eb1 S secvpf

Related posts

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

கஸ்தூரி மேத்தி ஆலு பிரை

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

nathan

பொடித்த மிளகு சாதம்

nathan

வெஜிடபிள் கறி

nathan

கலவை காய்கறி மசாலா

nathan