25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sZWahSqlwomen
பெண்கள் மருத்துவம்

பெண்கள் செய்துகொள்ள வேண்டிய வைட்டமின் டி பரிசோதனை

இந்த காலத்தில் நோய்கள் வருவதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோம். மேலும், இந்த நோய்கள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. இளம் பெண்களும் கூட இந்த நோய்களுக்கு பலியாகும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே கண்டறிவதும், பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்வதும் தான் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள செய்யவேண்டிய முதன்மையான விஷயங்களாக உள்ளன. 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை வைட்டமின் டி பரிசோதனை.

எலும்பு வலி, முதுகு வலி மற்றும் கால் வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும் போது, இந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறார் எலும்பு மருத்துவ நிபுணர்.

இது இளம் பெண்கள் செய்து கொள்ள வேண்டிய முக்கியமான பரிசோதனையாகும். 80 முதல் 90 சதவீத இளம் பெண்களின் உடலில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளது. எனவே, அனைத்து பெண்களும் அந்தந்த பருவத்தில் வைட்டமின் டி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். முதுமைப் பருவத்தில் உள்ள பெண்களைத் தாக்கும் எலும்புப்புரை நோய் (Osteoporosis) அல்ல இது.

கால்களில் உணர்வற்ற நிலையையோ அல்லது குறுகுறுப்பாகவோ, பலவீனமாக இருப்பதை உணரும் போதும் மற்றும் அனீமியாவினால் சமநிலையை இழந்திருக்கும் நேரங்களிலும் இந்த பரிசோதனையை செய்வது நலம்.
sZWahSqlwomen

Related posts

குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன தெரியுமா?…

sangika

கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

nathan

பெண் மலடு கிடையாது

nathan

கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனைகள்!…

sangika

பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன!

sangika

கருப்பை கட்டிகளை கரைக்கும் வெண்கடுகு

nathan

உடனே கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை

nathan

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika