33.4 C
Chennai
Saturday, Jul 5, 2025
அழகு குறிப்புகள்

பாகிஸ்தானில் நடுரோட்டில் குழந்தையை கூவி கூவி விற்ற தந்தை..!

பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தான் பெற்ற குழந்தையையே நடுரோட்டில் கூவி கூவி விற்க முயன்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் கோத்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிசார் லஸ்ஹாரி என்பவர் சிறைத்துறை போலீஸாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தனது மூத்த மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவனுக்கு ஆப்ரேஷன் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

 

அப்பொழுது அவர் தன் மகனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு உயர் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விடுமுறை வழங்குவேன் என்று கூறியுள்ளனர்.

இவர் லஞ்சம் வழங்க மறுத்ததால் இவருக்கு விடுமுறையும் வழங்காமல் இவரை லார்கானா என் பகுதிக்கு பணி மாற்றமும் செய்துள்ளனர்.

இது அவர் இருக்கும் பகுதியிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிசார் தனது இளைய மகனை தூக்கி அவனை விற்பனை செய்யப்போவதாக சொல்லி ரூ50 ஆயிரத்திற்கு அவனை கூவி கூவி விற்றார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

லஞ்சம் கொடுக்காத ஆத்தரத்தில் உயர் அதிகாரிகள் தண்டனை வழங்கியதாகக் கூறிய நிசார், இது குறித்து புகார் அளிக்க வேண்டும் என்றால் கராச்சி செல்ல வேண்டும் ஆனால் அதற்கு தன்னிடம் காசில்லை எனவும், தற்போது தான் தன் மகனுடன் ஆப்ரேஷனிற்காக மருத்துவமனைக்கு செல்லவா? அல்லது பணிக்காக லார்கானா செல்லவா என தெரியாமல் ஆத்திரத்தில் இதை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

Related posts

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?

nathan

தெரிந்துகொள்வோமா? நல்லெண்ணெய் குளியல்

nathan

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பால் நேர்ந்த விபரீதம்

nathan

உங்க குழந்தைகளுக்கு ‘இந்த’ பழக்கவழக்கங்கள கண்டிப்பா கத்துத்தரணுமாம்… தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களே! உங்களுக்கு முடி கொட்டுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு..

nathan

துலாம் ராசிபிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்?

nathan

பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

nathan

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan