27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 6192a852
இலங்கை சமையல்

இலங்கையரின் வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி…

ஒவ்வொரு நாட்டிலும் நாட்டுக்கோழியை சமைக்கும் விதம் வேறுப்படுகின்றது.

இன்று நாம் இலங்கையர்களின் வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

 

தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி – 1 கிலோ
வெங்காயம் – 3
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 2டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
கிராம்பு – 4
பட்டை – 1 துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2டேபிள் ஸ்பூன்
தக்காளி – 4
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு – 2
உப்பு – சுவைக்கேற்ப வறுத்து
எண்ணெய் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 6
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 1 கப்

செய்முறை
முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் கழுவிய நாட்டுக்கோழியை குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், மல்லி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மசாலா பொடிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

 

பின்பு வேக வைத்த சிக்கனை சேர்த்து கிளறி, அரைத்த மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி தயார்.

Related posts

முட்டைக்கோப்பி

nathan

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

nathan

மைசூர் போண்டா

nathan

யாழ்ப்பாணத்து குழல் புட்டு

nathan

எள்ளுப்பாகு

nathan

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

nathan

இலங்கை சிங்கள மக்கள் விரும்பி உண்ணும் பால் சோறு….

nathan

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

கொத்து ரொட்டி srilanka recipe tamil

nathan