28.1 C
Chennai
Sunday, Dec 14, 2025
26 greengramdosa
Other News

உங்களுக்கு தெரியுமா கொழுப்பை குறைக்க உதவும் பச்சை பயறு தோசை

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு – 1 கப்

அரிசி – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி – 1 இன்ச்
சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!

இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Courtesy: MalaiMalar

 

Related posts

இயக்குனர் பாண்டிராஜன் பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

சுவையான கொத்தமல்லி வடை

nathan

வரதட்சணை இத்தனை கோடியா !!பிரபுவின் மகளை மறுமணம் செய்துகொண்ட ஆதிக் ரவிச்சந்தரன்!!

nathan

கமலின் முன்னாள் மனைவி சரிகாவை நினைவிருக்கா?

nathan

அந்த உணர்ச்சி அதிகமா இருக்கு.. கூறிய சமீரா ரெட்டி..!

nathan

எம்.குமரன் படத்தில் நான் வாங்கிய சம்பளம் -பகிர்ந்த விஜய் சேதுபதி.

nathan

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஆஷிகா ரங்கநாதன்

nathan

சனியும் சுக்கிரனும் -கோடீஸ்வரனாக்கப் போகும் ராசிகள்

nathan

நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்த பெண்!

nathan