28.1 C
Chennai
Monday, Feb 24, 2025
05 1449302539 1 urine
பெண்கள் மருத்துவம்

பெண்களின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!!!

சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும். அதிலும் பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். மக்களே! இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும். கவனமா இருங்க.

சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்து வந்தாலும், சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரக கற்கள் வந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக வருவதால், அதனை பலரும் பொருட்படுத்தாமல் இருந்துவிடுவர். நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!

இப்படி விட்டுவிட்டால், பின் மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்கக்கூடும். சரி, இப்போது பெண்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து அந்த அறிகுறிகள் இருந்தால், உடனே அவற்றைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை
இது பொதுவான ஓர் அறிகுறி. எனவே சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாணமாக நினைக்காமல், உடனே அதனை பரிசோதித்து, சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

குமட்டல்
உங்களுக்கு திடீரென்று குமட்டல் வர ஆரம்பிக்கிறதா? அதிலும் அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம்.

தெளிவற்ற சிறுநீர்
கழிக்கும் சிறுநீர் தெளிவின்றி இருந்தால், அதுவும் சிறுநீரக கற்களுக்கான அறிகுறி. மேலும் தெளிவற்ற சிறுநீர், சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும். எனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள்.

அவசரமாக சிறுநீர் வருவது
அவசரமாக சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இந்த உணர்வு ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாகும்.

காய்ச்சல்
குமட்டல், தெளிவற்ற சிறுநீர் போன்றவற்றுடன் காய்ச்சல் அதிகம் இருந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சையைப் பெறுங்கள்.

அடிவயிற்று வலி
அடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்தித்தால், உடனே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

அதிகப்படியான வியர்வை
வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறினால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

சிறுநீரில் இரத்தம்
சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

பிறப்புறுப்பைச் சுற்றி வலி
பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டால், அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர் கழிக்கும் போது கற்கள் சிறுநீர் வடிகுழாய் வழியே நகர்வதால் தான் பிறப்புறுப்பைச் சுற்றி வலி ஏற்படுகிறது.

எரிச்சல்
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறதா? அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியே. அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-6 நிமிடங்கள் வரை இருக்கும்
05 1449302539 1 urine

Related posts

Home Remedies for Breast Enlargement – மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

உண்மையான காதல்னா எது தெரியுமா? இதை படியுங்கள்…

nathan

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

மாதவிலக்கு நாட்களில் தேநீர், கார உணவுகளை தவிர்ப்பது நல்லது

nathan

கருப்பையை பாதுகாக்க எளிய டிப்ஸ்!

nathan

குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!

nathan

. குழந்தை பிறந்து ஓராண்டு காலம் வரையிலும் தாய்ப்பால் தவிர்த்து வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது

nathan

கர்ப்பம் தரிப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை

nathan

உள்ளாடை அணியும் போது கவனிக்க வேண்டியவை…..

sangika