25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
25 radish capsicum
சமையல் குறிப்புகள்

சூப்பரான முள்ளங்கி குடைமிளகாய் மசாலா

மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு என்று சமைத்து போர் அடித்திருந்தால், இன்று முள்ளங்கி குடைமிளகாய் மசாலாவை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மசாலாவானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இங்கு முள்ளங்கி குடைமிளகாய் மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.

Radish Capsicum Masala Recipe
தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரைம் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10

செய்முறை:

முதலில் முந்திரி மற்றும் கசகசாவை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் முள்ளங்கி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, பிறகு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் அப்படியே வைத்து பின் இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், முள்ளங்கி குடைமிளகாய் மசாலா ரெடி!!!

Related posts

சுவையான சீஸ் ஆலு பன்ச் ரெடி..

sangika

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika

சுவையான திணை பாயாசம்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

nathan

முட்டை உடையாமல் பதமாக வேக வைப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

nathan

தக்காளி குழம்பு

nathan

சுவையான தட்டைப்பயறு குழம்பு

nathan

சுவையான வெந்தய குழம்பு

nathan

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika