26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
facepack 1
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 2 பொருளை வெச்சு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராதாம்…

வேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் மட்டுமின்றி சருமத்திலும் பல நன்மைகளைத் தரக்கூடியது. வேப்பிலை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஓர் இயற்கை மருந்து. வேப்பிலையின் சாற்றினை உட்கொள்வது சர்க்கரை நோய் மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்கு நன்மை பயக்கும். இது தவிர, வேப்பிலை சருமத்தின் நிறத்தை சீராக்கவும், மாசற்றதாக்கவும் மற்றும் அழகாக்கவும் உதவுகிறது.

வேப்பிலை சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதால், இது பல அழகு மற்றும் சரும பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுப்போன்றே சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது தான் தயிர். இந்த தயிரை தனியாக சருமத்தில் பயன்படுத்தினாலே, சருமத்தில் நல்ல மாற்றம் தெரியும். அதுவும் தயிரை வேப்பிலையுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போட்டால், அது சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை தரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தினால், பல பிரச்சனைகள் மாயமாய் மறைந்துவிடும்.

இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து கலந்து பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், இந்த ஃபேஸ் பேக் போட்டால் சரும செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். இப்போது வேப்பிலை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்கால் பெறும் அழகு நன்மைகளைக் காண்போம்.

சரும கருமை குறையும்

வேப்பிலை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால், அது மாசடைந்த சரும திசுக்களை சரிசெய்து, வெயிலால் ஏற்பட்ட சரும கருமையைக் குறைக்க உதவும். நீங்கள் தினமும் வெளியே சுற்றுபவராயின், இரவு தூங்கும் முன் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பிம்பிளைப் போக்கும்

உங்கள் முகத்தில் பிம்பிள் அதிகமாக வருகிறதா? என்ன செய்தாலும் முகத்தில் உள்ள பிம்பிள் போகமாட்டீங்குதா? அப்படியானால் வேப்பிலை மற்றும் தயிர் ஃபேஸ் பேக் போடுங்கள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி, பிம்பிள் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

கரும்புள்ளிகள்

நீங்கள் கரும்புள்ளி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? கரும்புள்ளியைப் போக்குவதற்கு பல வழிகளை முயற்சித்தும் பலனில்லையா? அப்படியென்றால் வேப்பிலை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள். இது சருமத் துளைகளில் உள்ள அழுக்கை முழுமையாக வெளியேற்றி, கரும்புள்ளி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

கருமையான தழும்புகள்

முகப்பருக்கள் மற்றும் முகத்தில் காயங்களால் ஏற்பட்ட கருமையான தழும்புகள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? இந்த கருமையான தழும்புகளைப் போக்க வேப்பிலை தயிர் ஃபேஸ் பேக் பெரிதும் உதவி புரியும். இந்த பேக்கில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இதை காயங்களின் மீது தடவி வந்தால், காயங்கள் விரைவில் குணமாவதோடு, தழும்புகளின்றி மறையும்.

ஈரப்பதமூட்டும்

உங்கள் சருமம் அதிகமாக வறட்சி அடைகிறதா? சரும வறட்சியைத் தடுக்க பல பொருட்களைப் பயன்படுத்தியும் பலனில்லையா? அப்படியானால் சருமத்தின் ஈரப்பசையைத் தக்க வைக்க வேப்பிலை தயிர் ஃபேஸ் பேக் போடுங்கள். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

நல்ல சன் ஸ்க்ரீன்

வேப்பிலை மற்றும் தயிர் ஃபேஸ் பேக் ஒரு நல்ல சன் ஸ்க்ரீனாகவும் செயல்படும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தினால், சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

கருவளையங்களை நீக்கும்

உங்கள் முகத்தில் அசிங்கமாக கருவளையங்கள் உள்ளதா? அதை எவ்வித சிரமமும் இல்லாமல் எளிதில் போக்க வேண்டுமா? அப்படியானால் வேப்பிலை தயிர் ஃபேஸ் பேக் போடுங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றுவதோடு, கருவளைய பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும்.

Related posts

முதுகு அழகு பெற…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்க குளிக்கும் நீரில் சிறிது பால் கலந்து குளிப்பதால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயங்கள் என்ன தெரியுமா?

nathan

கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

சீக்கிரம் வெள்ளையாக – இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடியுங்க

nathan

உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில்!..இதோ சில வழிகள்!

sangika

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

மஞ்சள் இருக்கு மங்காத அழகு!

nathan

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

nathan

சுருக்கமில்லா இளமையான அழகு கிடைக்க தினம் ஒரு ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க !!

nathan