இந்த ஆண்டின் பருவமழை தொடங்கி பெய்து கொண்டிருக்கிறது. பருவமழை ஈரப்பதம் நமது சருமத்தை அதிகமாக பாதிக்கும். எனில், இந்த வருடத்தில் பலவீனமான செரிமான அமைப்பு நம் உடல் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். வெப்பநிலை குறையும்போது,உடல் சிறிது தண்ணீரைத் தக்கவைக்க முனைகிறது, இதன் விளைவாக தோல் தடிப்புகள் மற்றும் பருக்கள் ஏற்படுகின்றன. தவிர, பருவமழை அதனுடன் இணைந்த நீரேற்றம் மற்றும் பலவீனமான உயிரணு உருவாக்கம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. இது மந்தமான நிலைக்கு வழிவகுக்கும்.
Skincare diet for monsoon in tamil
இருப்பினும், இந்த மழை காலநிலையில் வறண்ட மற்றும் மந்தமான தோலால் நீங்கள் சோர்வடைவீர்கள். இதற்கு விலையுயர்ந்த தோல் பராமரிப்பு தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. இதன் மூலம் ஒருவர் அவர்களின் சருமத்தை பாதுகாக்க முடியும். இதற்கு உணவு உங்களுக்கு உதவும். இந்த பருவமழை காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க நீங்க செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மழைக்காலங்களில் சருமத்திற்கு ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம்
நமது சருமத்தில் ஈரப்பதத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராட நாம் பல கிளென்சர்கள் மற்றும் எக்ஸ்ஃபோலியேட்டர்களைப் பயன்படுத்தலாம் அல்லது பல தோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம். ஆனால் நாம் சரியாகச் சாப்பிடாத வரை, இதற்கான விளைவுகள் ஏதும் தோன்றாது. உங்கள் மழைக்கால உணவில் நீங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகளின் பட்டியல் இங்கே உள்ளன. இவை சருமப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்திற்கு ஒரு பிரகாசமான பளபளப்பைக் கொண்டுவரும்.
பருவகால பழங்களின் உட்கொள்ளலை அதிகரிக்கவும்
மழைக்காலம் பருவகால பழங்களை உடன் கொண்டு வருகிறது. இது நம் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக பழங்களில் உயர் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீவிர செயல்பாடுகளை தடுக்கின்றன, ஏனெனில் அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல் செயல்பாடு நம் சருமத்தை மந்தமாகவும் சுருக்கமாகவும் விட்டுவிடும். உங்கள் மழைக்கால உணவில் வைட்டமின் சி அதிகம் சேர்த்து பேரிக்காய், ஜாமூன், லிச்சி மற்றும் பீச் போன்ற பழங்களை உட்கொள்ளுங்கள்.
நீரேற்றமாக இருங்கள்
தோல் செல்கள் முதன்மையாக நீரால் ஆனவை. அதனால் தான் அவை நீரிழப்புடன் இருக்கும்போது நம் தோல் வறண்டு காணப்படுகிறது. உங்கள் சருமம் எப்போதும் துடிப்பாகவும், பளபளப்பாகவும் அழகாகவும் இருப்பதை உறுதி செய்ய, ஒரு நாளில் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். சிலருக்கு, தண்ணீரின் சுவை சற்று சலிப்பாகத் தோன்றும். எனவே அதற்கு பதிலாக, அவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட புதிய சாறுகள், சூப்கள் மற்றும் கிரீன் டீ போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் தங்களை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
எண்ணெயில் வறுத்த உணவைத் தவிர்க்கவும்
பெரும்பாலும், இந்த வானிலையில் நம் பசியை அடக்குவது கடினமாகிவிடும். மேலும் மழைக்காலத்தில் தினமும் சூடான தேநீர் கோப்பையுடன் சுடசுட பஜ்ஜி சாப்பிடுவது நமது சருமத்தை மந்தமாகவும், சோர்வாகவும் மாற்றும். எனவே, மழைக்காலங்களில் உங்கள் உணவு உட்கொள்ளலை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வெளிப்புற உணவு உங்கள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் தோலின் ஆரோக்கியத்திற்கு வறுத்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளிலிருந்து சற்று விலகி இருப்பது தூரத்தை பராமரிப்பது நல்லது.
ஆரோக்கியமான விதைகளை உட்கொள்ளுங்கள்
இது குறைவாக கேட்கப்பட்ட ஆலோசனையாகும். ஆனால் இது உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு அற்புதங்களைச் செய்யும். இந்த விதைகளை தூக்கி எறியவோ அல்லது நிராகரிக்கவோ கூடாது, ஏனெனில் அவை ஊட்டச்சத்துக்களின் முழுமையான புதையல் ஆகும். சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது உங்கள் சருமம் இளமையாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க உதவும்.
சர்க்கரை மற்றும் இனிப்பு பொருட்களைத் தவிர்க்கவும்
எவ்வளவு கசப்பாக இருந்தாலும், நீங்கள் சர்க்கரையை உட்கொள்வதைக் குறைப்பது அவசியம். சர்க்கரையின் நுகர்வு உருவாக்கும் குளுக்கோஸ் விரைவு கிளைசேஷன் எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. இது சர்க்கரை மூலக்கூறுகளின் பிணைப்பை ஏற்படுத்துகிறது, இது சருமத்தை மந்தமானதாக ஆக்குகிறது மற்றும் வயதான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. எனவே, சர்க்கரை மற்றும் இனிப்பு பொருட்களை குறைக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும், முதுமையில் தோல் சுருங்கி போகாமல் இருக்க உதவுகிறது. அதேநேரத்தில் உங்களை அதிக ஆற்றல் மற்றும் பொருத்தமாக உணர வைக்கும்.
இறுதிகுறிப்பு
நம் கவலையை தூக்கி தூரம் எறிந்து விட்டு, மழையில் நம்மை மகிழ்விக்க வேண்டிய பருவம் என்றாலும், உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்த மறக்காதீர்கள். ஏனெனில் அது மட்டுமே அதன் மொத்த பாதிப்பையும் உங்களுக்கு ஏற்படுத்தும். இந்த ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றி மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பாய் வைத்திருங்கள்.