யாழ்ப்பாணத்து சுவை மிகு பலகாரங்களில் ஒன்றான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பனங்களி – 2 கப்
கோதுமை மா – 1 கப்
சீனி – 1/2 கப்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் பனங்களி தயாரித்துக் கொள்ளலாம்,
நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுத்து, மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.
பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.
வெட்டிய பின்னர் மீண்டும் தண்ணீரில் கழுவிவிட்டு, அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.
மெல்லிய வெள்ளைத்துணி கொண்டு களியை வடித்தெடுத்த பின்னர், பச்சை வாடை போகும் வரை காய்ச்சி எடுக்கவும்.
பின்னர் காச்சிய பனங்களியுடன் கோதுமை மா, உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
எண்ணெய் சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால் சுவையான பனங்காய் பணியாரம் தயார்.
இதை 2 அல்லது 3 நாட்கள் வைத்துக்கூட பயன்படுத்தலாம்.