32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
21 6195ed2b9f
அழகு குறிப்புகள்

Periods பற்றி என்ன தெரியும்? சர்வைவரில் ஆண் போட்டியாளர்களை வாயடைக்க வைத்த பெண்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை போன்று மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இதில் விளையாடி வரும் நந்தா மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

காரணம் எந்தவொரு டாஸ்க் என்றாலும் இருவரும் முழு ஈடுபாட்டுடன் கடைசிவரை சென்று வெற்றி பெறுவார்கள்.

இந்நிலையில் கூட்டணியாக இருக்கும் காடர்கள் அணி வேடர்கள் அணியில் இருப்பவர்களை அடுத்தடுத்து டார்கெட் செய்து வெளியே அனுப்பி மூன்றாம் உலகத்திற்கு தள்ளிவிடுகின்றது.

இதில் ஐஸ்வர்யா, அவரை அடுத்து நந்தா, சரண் என மூன்று பேர் தற்போது மூன்றாம் உலகத்தில் இருந்து வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் நந்தா மூன்றாம் உலகத்திற்கு வந்ததை அவதானித்த ஐஸ்வர்யா சிறு குழந்தையாக மாறி அவர் இடுப்பின் மீது தொற்று முத்தமழை பொழிந்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் ஐஸ்வர்யா மூன்றாம் உலகத்தில் நந்தா மற்றும் சரண் இருவரிடமும் Periods பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

பொதுவாக பெண்கள் மாதந்தோறும் அனுபவித்து வரும் மாதவிடாய் நாட்களில் பல இன்னல்களையும் சேர்த்து அனுபவித்து வருகின்றனர்.

ஒருபுறம் மனநிலை இறுக்கமாக மாறுவதுடன் உடல்நிலை மிகவும் வலி மிகுந்ததாகவே இருக்கும்.

ஆனால் இதனை வெளியே வெளிப்படையாக பேசுவதற்கு இன்றும் தயங்கி வருகின்றனர். ஐஸ்வர்யாவின் இந்த கேள்வியும் நந்தா, சரண் இருவரையும் சற்று சங்கடத்தினை ஏற்படுத்தியது. பின்பு இருவரும் அதற்கான பதிலை அளித்தனர்.

பின்பு ஐஸ்வர்யா 11 வயதில் வயதுக்கு வந்த நிலையில், வீட்டில் அசுத்தம் என்று அந்த நாட்களில் ஒதுக்கி வைப்பதையும் தான் படும் கஷ்டத்தினையும் வெளியே கூறியதோடு, அந்த நாட்களை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமலேயே கழித்து வந்ததையும் கூறியுள்ளார்.

இன்றும் வயதானவர்கள் இந்த காலங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பதுடன், ஆண்களுக்கு இது தெரிந்துவிட்டால் ஒரு அசிங்கம் என்று நினைத்து வருவதை ஐஸ்வர்யாவின் குமுறல் இக்காட்சியின் மூலம் வெளிக்காட்டியுள்ளது.

Related posts

தீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவரே தன்னுடைய அழகு ரகசியம் பற்றி சொல்கிறார்!…

nathan

வெள்ளி கொலுசை பளபளப்பாக்குவது எப்படி?

nathan

இதுபோன்றே தினமும் செய்துவந்தால் நாளடைவில் கருப்பு நிறம் முற்றிலுமாக மறைந்து அழகு கூடியிரு க்கும்.

sangika

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

nathan

பிளாக்ஹெட்ஸை அகற்ற, நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

nathan

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

sangika

மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ……..

sangika

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?

nathan

நம்ப முடியலையே… பிரம்மாண்ட சொகுசு வீட்டை விற்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் கணவர்!

nathan