26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
0e4d619d 4beb 4b11 be23 f06c18beada5 S secvpf1
அசைவ வகைகள்

தயிர் சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/4 கிலோ
தயிர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு(பொடியாக நறுக்கவும்)
அரைத்துக்கொள்ள :

பூண்டு – 6 பெரிய பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகு – 10
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

• சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் அரைத்த விழுது, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

• சுமார் 15 நிமிடங்களில் சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

• கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

குறிப்பு

• தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

0e4d619d 4beb 4b11 be23 f06c18beada5 S secvpf

Related posts

கிராமத்து மீன் குழம்பு

nathan

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு – முட்டை ஆம்லெட்

nathan

ஹெர்ப் சிக்கன் ஃப்ரை

nathan

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

nathan

மட்டன் சில்லி ஃப்ரை

nathan

முட்டை பெப்பர் ஃபிரை

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

காஷ்மீர் மிர்ச்சி மட்டன் குருமா

nathan