25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
money 1
Other News

உங்க வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? வீட்டு முன்னாடி இத வையுங்க…

ஒருவரது வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் அந்த வீட்டின் பிரதான கதவு வழியாக நுழைகிறது என்று கூறப்படுகிறது. மறுபுறம், வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றல்கள் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே பலர் நிதி பிரச்சனைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது.

Tension Will Go Away And Money Will Come, Just Put These Things At The Main Door
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான வாசலுக்கு முன் ஒருசில சிறப்பான பொருட்களை வைப்பதன் மூலம் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஏனெனில் இப்பொருட்கள் வாஸ்து குறைபாடுகளை நீக்கி, வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் நுழைய வழிவகை செய்கிறது. செல்வத்தின் நாயகியான மகாலட்சுமி தேவியின் அருள் இருப்பதால், இது வீட்டில் உணவு மற்றும் பண பற்றாக்குறை இல்லாமல் செழிப்போடு வைத்திருக்கிறது.

துளசி செடி

இந்து மதத்தில் துளசி செடி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப் படி, இதை வீட்டின் பிரதான வாசலுக்கு அருகே வைத்திருக்க வேண்டும். அதோடு, தினமும் காலை மற்றும் மாலையில் துளசி செடிக்கு நீரை ஊற்றி, விளக்கேற்றி வழிபட வேண்டும். இதனால் நிதி பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நுழைந்து வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அமைதி நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

சாப்பிடவும் முடியாமல், மூச்சு விடவும் முடியாமல்.. பல நாட்களாக போராடும் சிறுவன்.. உதவுங்கள் ப்ளீஸ்

லட்சுமி தேவியின் பாத சுவடுகள்

லட்சுமி தேவியின் பாத சுவடுகளை வீட்டின் பிரதான வாயிலில் வைப்பது மிகவும் புனிதமானது. ஏனெனில் இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை நுழையச் செய்கிறது மற்றும் லட்சுமி தேவியின் அருள் முழு குடும்பத்திற்கும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் செல்வம் ஆகியவை எப்போதும் நிலைத்திருக்கும்.

லட்சுமி தேவியின் போட்டோ

வீட்டின் பிரதான நுழைவாயிலில் லட்சுமி தேவியின் சின்னத்துடன், அன்னை தேவியின் போட்டோவையும் வைக்கலாம். இச்செயலால், லட்சுமி தேவியின் எல்லையற்ற அருள் வீட்டிற்கு கிடைக்கும். மேலும் பணம் தொடர்பான பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.

தோரணம்/பந்தன்வார்

லட்சுமி தேவியின் எல்லையற்ற அருளை வீட்டில் பராமரிக்க வேண்டுமானால், வீட்டின் பிரதான வாசலில் ஒரு தோரணத்தைக் கட்டுங்கள். வாஸ்துப் படி, மாவிலைகளால் வீட்டின் பிரதான வாசலில் தோரணம் கட்டுவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் நுழைய அனுமதிக்கிறது. மேலும் நிதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

ஸ்வஸ்திக் சின்னம்

பெரும்பாலான வீடுகளில் ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டின் பிரதான வாசல் கதவுகளில் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள். ஏனெனில் இது நன்மைகளை அளிக்கும். வாஸ்து மற்றும் ஜோதிடத்தின் படி, இந்த புனிதமான சின்னம் சந்தோஷம் மற்றும் செழிப்புக்கான அடையாளமாகும். இதை வீட்டின் பிரதான வாசலில் வைப்பதன் மூலம், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும். இதன் விளைவாக வீட்டில் உணவு மற்றும் பணப் பற்றாக்குறை நீங்கி, வீடு செழித்து இருக்கும்.

Related posts

வீட்டில் இவற்றையெல்லாம் செல்ல பிராணிகளாக வளர்க்கக் கூடாது…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

2024 குருப்பெயர்ச்சி பலன்கள் : பணமழையில் நனையப்போகும் ராசியினர்

nathan

ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மாமியார் விளக்கம்

nathan

தல யு ஆர் கிரேட் ! லட்ச கணக்கில் பணத்தை கொடுத்ததோடு இல்லாமல் ஜிஎஸ்டி சேர்த்து கொடுத்த தல அஜித் !

nathan

கார்த்திகை மாத ராசி பலன் 2023 -ரிஷபம்

nathan

பிறந்த குழந்தை பராமரிப்பு

nathan

ஓப்பனாக கூறிய டிக் டாக் இலக்கியா..!ஒரு நைட்டுக்கு 2 லட்சம்..”

nathan

வைரலாகும் GOAT படபிடிப்பில் தளபதி விஜய் புகைப்படம்

nathan