25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pic
சமையல் குறிப்புகள்

சூப்பரான மொறு மொறு தோசை

தமிழர்களின் உணவும் மட்டுமில்லாமல் இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு.

ஆனால் பலருக்கும் வீட்டில் செய்யும் தோசை விட ஹோட்டல் ஸ்டைலில் சுடும் தோசையையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.

அந்த வகையில் சுவையான தோசையை எப்படி வீட்டிலிருந்தபடியே செய்வது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அல்லது இட்லி அரிசி – 200 கிராம்

பச்சரிசி – 200 கிராம்

வெள்ளை முழு உளுந்து – 100 கிராம்

கடலைப் பருப்பு – 25 கிராம்

வெந்தயம் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

நடு நடுவே தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.

அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும். இந்த சுவையான தோசைக்கு காரசட்னி, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

Related posts

பீர்க்கங்காய் கிரேவி

nathan

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

சூப்பரான மலாய் கார்ன் பாலக்

nathan

சுவையான மிளகு அவல்

nathan

பட்டாணி மசாலா

nathan

பாலக் டோஃபு கிரேவி ருசி தெரியுமா உங்களுக்கு…..

sangika

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை

nathan

முட்டை உடையாமல் பதமாக வேக வைப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

nathan