25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
t 14
Other News

சுவையான இறால் முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

இறால் – 100 கிராம்

முட்டை – 2
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

இதை நீங்களே பாருங்க.! முதல் நாளே சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்

nathan

விஜய்யே வந்து என் மீசையை எடுக்கட்டும்… மீண்டும் சவால் விடும் நடிகர்…

nathan

spinach in tamil -கீரை

nathan

36 புத்தகங்கள் வாசித்து 5 வயது சிறுமி உலக சாதனை!

nathan

ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்

nathan

மனைவி மற்றும் மகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய இமான்

nathan

ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ

nathan

எம்.குமரன் படத்தில் நான் வாங்கிய சம்பளம் -பகிர்ந்த விஜய் சேதுபதி.

nathan

மாதம் 1 கோடி சம்பாதித்த 12 வயது ‘பொம்மை நாயகி’யின் கதை!

nathan