26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
acnescars 1519
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு மாஸ்க் பருக்களால் வந்த தழும்புகளை உடனே மறையச் செய்யும்!

பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. ஒருவருக்கு முகப்பரு வந்தால், அந்த பரு போவதற்குள் முகத்தின் அழகே பாழாகிவிடும். எனவே பலரும் முகப்பருக்களைப் போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பருக்கள் மறைந்திருக்காது. சில சமயங்களில், கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, அசிங்கமாக இருக்கும் பருக்களை சிலர் கிள்ளிவிடுவார்கள்.

Burning Face Mask That Eliminates Pimple Scars From Your Skin
இப்படி கிள்ளி விடுவதால், பருக்கள் அவ்விடத்தில் கருமையான தழும்புகளை உண்டாக்கும். பருக்கள் இருக்கும் போது கூட முக அழகு பாதிக்கப்படாது. ஆனால் அது போகும் போது விட்டு செல்லும் கருமையான தழும்புகள் தான், சரும அழகையே மோசமாய் காட்டும். இந்த பருக்களைப் போக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் முகப்பருக்களை மாயமாய் மறையச் செய்யும்.

அதில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. இது பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதிலும் இந்த பட்டையுடன் ஒருசில மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், தழும்புகள் மறைவதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது அந்த பட்டையைக் கொண்டு எப்படி மாஸ்க் போடுவதென்று காண்போம். முக்கியமாக இந்த மாஸ்க் சற்று எரிச்சலை உண்டாக்கும்.

பட்டை

பட்டையை சருமத்தில் பயன்படுத்தும் போது, அது சில நிமிடங்கள் எரிச்சலுணர்வை ஏற்படுத்தும். பட்டையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் மற்றும் பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

பூந்திக்கொட்டை

பூந்திக் கொட்டையில் பி வைட்டமின்களான ரிபோப்ளேவின், போலிக் அமிலம் மற்றும் நியாசின் அதிகளவில் உள்ளது. பூந்திக்கொட்டையில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான பீட்டா கரோட்டீன், க்ரிப்டோஜாந்தின் போன்ற சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களும் உள்ளன.

தேன்

தேன் மற்றொரு அற்புதமான மருத்துவ குணம் நிறைந்த பொருள். இது சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும். அதாவது தேன் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். அந்த அளவில் இது சருமத்துளைகளினுள் ஊடுருவி நுழைந்து, நீண்ட நேரம் வறட்சி ஏற்படாமல் தடுக்கும். மேலும் தேன் சருமத்துளைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். அதோடு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சருமத்தில் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும். எலுமிச்சை இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். அத்துடன் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தேன் கலந்து பயன்படுத்தும் போது, சரும ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பட்டைத் தூள் – 1/2 டீஸ்பூன்

* பூந்திக்கொட்டை பொடி – 1/2 டீஸ்பூன்

* தேன் – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு துணி பயன்படுத்தி, கண்களில் படாதவாறு முகத்தில் தடவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை 20 நிமிட்ம் ஊற வைக்க வேண்டும். ஒருவேளை எரிச்சலை தாங்க முடியாவிட்டால், குறைந்தது 10 நிமிடம் வைத்திருக்கவும்.

* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்போது பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க உதவும் வேறு சில இயற்கை வழிகளையும் காண்போம்.

தக்காளி

தக்காளியை வெட்டி, அதைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள பருத் தழும்புகளை மறையச் செய்யலாம்.

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறு மிகச்சிறந்த டோனர். இது சருமத்தின் அழகையும், பொலிவையும் மேம்படுத்தும். முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறையச் செய்வதற்கு வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது அதன் சாற்றினையோ, தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளைப் போக்கலாம்.

சந்தனம்

ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் இரவில் படுக்கும் முன் இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகளை மறைவதைக் காணலாம். முக்கியமாக இச்செயலால் சருமத்தின் நிறமும் மேம்படும். எனவே தவறாமல் இந்த வழியைப் பின்பற்றிப் பாருங்கள்.

முட்டை வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக்கருவை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முட்டையில் உள்ள புரோட்டீன், பாதிக்கப்பட்ட சரும செல்களை விரைவில் சரிசெய்துவிடுவதோடு, தழும்புகளையும் மறையச் செய்யும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, புதிய செல்களும் உருவாகும். முக்கியமாக பருக்களால் வந்த தழும்புகள் போய்விடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலும் முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறையச் செய்யும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், எப்பேற்பட்ட சரும பிரச்சனைகளையும் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

புதினா

புதினாவை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்கள் மற்றும் பருக்கள் விட்டு சென்ற தழும்புகளின் மீது தினமும் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவி வர, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தழும்புகள் மற்றும் பருக்களை மாயமாய் மறையச் செய்துவிடும்.

Related posts

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan

கருப்பழகை மாற்றும் சிகப்பழகு வேண்டுமா?

nathan

கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு

nathan

உங்க வறண்ட சருமத்தை பிரகாசமாக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

nathan

முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :ஆண்களுக்கும்

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

மங்கு குணமாகுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகைப் பாழாக்கும் கருவளையங்கள் வராமல் இருக்க சில வழிகள்!!!

nathan

ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்………

nathan