25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
5
மருத்துவ குறிப்பு

சேற்றுப்புண் குணமாக…!

சேற்றுப்புண் குணமாக…
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
அம்மான் பச்சரிசி இலையை வெறுமனே அரைத்துப் பூசலாம்.
மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
வேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம்.
மேற்சொன்ன நான்கில் ஏதேனும் ஒன்றைச் செய்து, சேற்றுப்புண்ணில் பூசுவதன் மூலமாக குணமாகலாம்.

தலைவலி, சளி: விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால்… மூக்கடைப்பு, நாசி ஒழுகுதல், தலைவலி போன்றவை சரியாகும். தும்பை இலைச்சாற்றை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் தேங்கியிருக்கும் நீர், கபால நீர், மண்டைக்குத்தல், மண்டையிடி போன்றவை குணமாகும். தும்பை இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் சளி விலகும். 20 தும்பைப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால்… தலைபாரம், ஜலதோஷம் போன்றவை சரியாகும்.

மெட்ராஸ் ஐ: மஞ்சள்பொடியை நீரில் கலந்து மெல்லிய பருத்தித் துணியில் நனைத்து நிழலில் காயவைத்து கண்களை துடைத்து வருவதன் மூலம் `மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் வலி, கண் சிவத்தல் போன்றவை சரியாகும்.

சொறி, படை: மஞ்சளுடன் வேப்பங்கொழுந்தை சேர்த்து அரைத்துப் பசையாகக் குழைத்து பூசி வந்தால்… சொறி, அரிப்பு, படை மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
5

Related posts

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

nathan

நாட்டு வைத்திய கருத்தரித்த பெண்களுக்கு

nathan

மார்பில் பால் கட்டிக்கொள்ளாமல் இருக்கணும்னா என்ன செய்யணும்?

nathan

குழந்தைகளை மொபைலுக்கு அடிமை ஆக்காதீர்கள்

nathan

கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

அடிபட்ட புண் ஆறாமல் இருக்கா? இதோ எளிய நிவாரணம்! இந்த மூலிகைகளில் ஒன்றை பயன்படுத்தி பாருங்க

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்-தெரிஞ்சிக்கங்க…

nathan

வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பான ஆறு உணவுகள்!!!

nathan

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

nathan