15 thai chicken basil
அசைவ வகைகள்

சூப்பரான பேசில் தாய் சிக்கன்

குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் விடுமுறை நாட்களில் அசைவ உணவை மூன்று வேளையில் நன்கு காரமாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவோம். இந்த வாரம் தாய் ஸ்டைலில் சிக்கனை காரமாக சமைத்து சாப்பிடுங்கள். அதிலும் துளசி இலையின் ஃப்ளேவர் சேர்த்திருக்கும் தாய் சிக்கனை தவறாமல் முயற்சித்துப் பாருங்கள்.

சரி, இப்போது அந்த காரமான பேசில் தாய் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Spicy Thai Chicken With Basil Recipe
தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ
துளசி இலை – 1/2 கப்
சிவப்பு மிளகாய் – 3 (நறுக்கியது)
பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மீன் சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் மீன் சாஸ் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துளசி இலைகளை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மற்றொரு அடுப்பில் உள்ள சிக்கனில் மிளகாய், சோயா சாஸ், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைவில் வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

Related posts

ஆலு மட்டர் – (உருளைக்கிழங்கு பட்டாணி கறி)

nathan

சால மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan

மட்டன் மிளகு வறுவல் எப்படிச் செய்வது?

nathan

இறால் ப்ரை &கிரேவி

nathan

மொச்சை நெத்திலி மீன் குழம்பு

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்

nathan

மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan