24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
6
வீட்டுக்குறிப்புக்கள்

வீட்டுக்குறிப்புக்கள்!

உப்பைக் கொட்டும்போது…

* தோசைக்கு அரைக்கும் போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

* தோசைக்கு அரைக்கும் போது அரிசியுடன் 1 ஸ்பூன் துவரம் பருப்புபையும், 1 ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறு மொறுவென்றிருக்கும்.

* தயிர் மிகவும் புளித்து விட்டால் அத்துடன் 4 பங்கு தண்ணீர் ஊற்றி அப்படியே வைத்திருக்கவும். 1/2மணி நேரம் கழித்து மேலே தெளிந்து நிற்கும் நீரை வடிகட்டி விட்டால் கீழே உள்ள தயிரில் புளிப்பு குறைந்து விடும்.

* உருளைக் கிழங்கை வேக வைக்கும்போது, தண்ணீரில் 1 ஸ்பூன் வினிகரை ஊற்றி வேகவைத்தால் கிழங்கு நல்ல வெள்ளையாக இருக்கும். விரைவில் வெந்து விடும்.

* அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

* கீரை பசுமை மாறாமல் இருக்க அதனை செய்தித்தாளில் மடித்து வைக்கலாம்.

* பூண்டு பற்களை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் மிக எளிதாக உரிக்கலாம்.

* ஆட்டிறைச்சி அல்லது காய்கறிகளைக் கொண்டு செய்யும் கறி வகைகளில் சிறிதளவு வறுத்த பார்லி மாவைச் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

* பச்சைப் பட்டாணியை வேக வைக்கும்போது அதில் 1 ஸ்பூன் சீனியைச் சேர்த்தால் பட்டாணி நிறம் மாறாமல் இருக்கும்.

* கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

* பருப்பை வேகவைக்கும் போது 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு விரைவாக வெந்து விடும்.

* பிரெட் புதிதாக இருந்தால் துண்டுகள் போட வராது. கத்தியை நெருப்பு அனலில் லேசாக சூடுபடுத்திக் கொண்டு பிரெட்டை வெட்டினால் துண்டுகள் அழகாக வரும்.

* சப்பாத்திமாவுடன் சிறிதளவு சமையல் சோடாவைச் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

* உப்பை ஜாடியில் கொட்டும் போது 1 ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.

* குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருட்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால், குருமா குழம்புப் பதமாக வரும்.
6

Related posts

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை வைத்திருக்கும் பெற்றோரா நீங்கள் அப்ப உடனே இத படிங்க…

nathan

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! 2 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கல் உப்பு பரிகாரம் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும்?

nathan

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

சூப்பரான 10 வீட்டு குறிப்புகள் ..

nathan

கல் நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா செல்வம் நிலைக்க செய்யவேண்டிய வாஸ்து முறைகள் என்ன…?

nathan