தேவையானவை :
சிக்கன் 750 கிராம்
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு 15 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்)
வெங்காயம் 2
டொமேட்டோ ப்யூரி 75 கிராம்
கறிவேப்பிலை 25 கிராம்
செட்டிநாடு மசாலாத்தூள் 150 கிராம்
உப்பு தேவையான அளவு
முந்திரி பேஸ்ட் 4 டேபிள்ஸ்பூன்
புளி 2 டேபிள்ஸ்பூன்
இடித்த கருப்பு மிளகு ஒரு டீஸ்பூன்
சர்க்கரை 4 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை 50 கிராம்
துருவிய தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்
செட்டிநாடு மசாலாத்தூள் தயாரிக்க:
எண்ணெய் 25 மில்லி
சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
கருப்பு மிளகு 1லு டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) 1லு டேபிள்ஸ்பூன்
பச்சை ஏலக்காய் 5
இலவங்கப்பட்டை 2
கிராம்பு 3
நட்சத்திர சோம்பு 1
பெருஞ்சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
கருப்பு ஏலக்காய் 2
கறிவேப்பில்லை 25 கிராம்
காய்ந்த மிளகாய் 5
மீடியம் சைஸ் வெங்காயம் 2
நறுக்கிய பூண்டு 12 பல்
நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் ஒரு டீஸ்பூன் (அலங்கரிக்க)
செய்முறை:
முதலில் செட்டிநாடு மசாலாத்தூள் தயாரிக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி, மசாலாவுக்குத் தேவையானவற்றைப் போட்டு 7 நிமிடம் வதக்கவும். இதை ஆறவைத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, எண்ணெயை வாணலியில் நன்றாக சூடுபடுத்திக்கொள்ளவும். அதில் பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். இதில் டொமேட்டோ ப்யூரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் செட்டிநாடு மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இத்துடன் சிக்கன் சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வேகவிடவும்.
இதில் உப்பு, முந்திரி பேஸ்ட், புளி மற்றும் 150 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி 3 முதல் 4 நிமிடம் வரை வேக விடவும். மிளகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிக்கன் நன்றாக வெந்ததும், கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் போட்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.