How to make almond burfi SECVPF
இனிப்பு வகைகள்

சுவையான பாதாம் பர்ஃபி

தேவையான பொருட்கள்:

பாதாம் – 1 1/2 கப்

சர்க்கரை – 1 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 100 மில்லி
குங்குமப்பூ – அலங்கரிக்க
பாதாம், பிஸ்தா – அலங்கரிக்க

செய்முறை:

பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான் ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடாமல் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள் போடவும்.

சுவையான பாதாம் பர்ஃபி தயார்.

Related posts

தேங்காய் பாயாசம்

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

சத்தான பீட்ருட் ஹல்வா.!!

nathan

ப்ரெட் புட்டிங் : செய்முறைகளுடன்…!

nathan

தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி

nathan

ரவா கேசரி

nathan

புதுவருடபிறப்பு ஸ்பெஷல் கச்சான் அல்வா செய்முறை விளக்கம்

nathan

நாவூறும்… பரங்கிக்காய் அல்வா

nathan

உலர் பழ அல்வா

nathan