23.4 C
Chennai
Wednesday, Dec 25, 2024
சைவம்

பனீர் பிரியாணி

தேவையான பொருட்கள்:

பனீர் – 1/2 கப்(பெரிய துண்டுகள்)

பாசுமதி அரிசி – 1 கப்

உப்பு – தேவைக்கேற்ப

தயிர் – 1 டீஸ்பூன்

எண்ணெய் – 5 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

முந்திரி – 10

அரைக்க

தேங்காய்த் துருவல் – 6 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2, புதினா

கொத்தமல்லி – 1/2 கப்

தக்காளி – 1

வறுத்துப் பொடிக்க

பட்டை, சோம்பு, கசகசா, கிராம்பு எல்லாம் சேர்த்து – 1 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக் கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும். குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு 2 கப் நீர் விட்டு, உப்பு, தயிர் சேர்த்து வறுத்த பொருட்களையும், அரைத்த பொருட்களையும் போட்டுக் கொதிக்க விட வும். கடாயில் எண்ணெய் விட்டு பனீர், இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, அரிசிக் கலவையில் சேர்த்து பிறகு வெயிட் போடவும். முதலிலேயே போட் டால் பனீர் கரைந்துவிடும். ஆவி வெளியேறியதும் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். பனீர் பிரியாணிக்கு காய்கறிகள் எதுவும் சேர்க்கக் கூடாது. அப்போதுதான் முழு பனீர் சுவை கிடைக்கும்.

Related posts

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

nathan

வெந்தயக்கீரை சாம்பார்

nathan

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

nathan

பேச்சுலர்களுக்கான… பச்சை பயறு குழம்பு

nathan

வரகு அரிசி புளியோதரை

nathan

பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு

nathan

காரசாரமான கருணைக்கிழங்கு காரக்குழம்பு

nathan

ஆஹா பிரமாதம்! சிக்கன் காலிஃப்ளவர் மசாலாக்கறி!

nathan