கர்ப்பமாக இருக்கும் முதல் 10-12 வாரங்களில் முடிந்தளவு டாப்ளர் ஸ்கேனை தவிர்க்கலாம். பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவும். அதுவும் மருத்துவரின் பரிந்துரைப்பு மிக மிக அவசியம்
முடிந்தவரையில் 3D மற்றும் 4D ஸ்கேன் வகைகளைத் தவிர்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் எந்த வித கருவியையும் தெரியாமல் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய முயற்சிக்க வேண்டாம்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் அனைத்துக் குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம்.
ஏனெனில், குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. இந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம் என்பதால் இப்படிச் சந்தேகம் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனலாம்.
கர்ப்பப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மீண்டும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்து இருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகப் பார்க்க முடியும்.
ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம். அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவது இயல்பான விஷயம்தான்.
Courtesy: MalaiMalar