28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
51
சூப் வகைகள்

சைனீஸ் சிக்கன் சூப்

* சிக்கன்: 1/4 கி
* வெங்காயத்தாள்: 1/2 கப் ( வெங்காயம் தனியாக , கீரை தனியாக பொடியாக அரிந்து கொள்ளவும்)
* குடைமிளகாய் : 1 நீளமாக அரிந்தது
* முட்டை :1
* சோள் மாவு: 1/2 கப்
* அஜின மோட்டோ : 1 சிட்டிகை
* உப்பு ருசிக்கேற்ப்பபூண்டு 6 பல்
* வெண்ணெய் :1 மே. க
* தண்ணீர் :1 லி

* முதலில் சிக்கனை கழுவி 2 கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவைக்கவும்.
* ஆறியதும் எலும்பை நீக்கி விட்டு இறைச்சியை மட்டும் எடுத்து கொள்ளவும்
* ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து,பட்டரை போடவும்
* பட்டர் உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தயும், பூண்டையும் போட்டு வதக்கவும்.
* அடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிய சிக்கனை போட்டு வேக விடவும்.
* பிறகு அரிந்தா குடைமிளகாயை சேர்க்கவும்.
* சிக்கன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி,மேலும் 1 லி தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும் இப்பொழுது அஜினமோட்டோவை சேர்க்கவும்
* சோள மாவை 1 கப் நீரில் கரைத்து சூப்பில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு உப்பு சேர்க்கவும்.
* முட்டையை நன்றாக அடித்து, அதை கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் ஊற்றும் போதே,ஒரு முள் கரண்டி கொண்டு சூப்பில் விழும் முட்டயை கலக்கி கொண்டேயிருக்கவும்… அப்பொழுதுதான் சூப்பின் மேல் முட்டை நூல் நூலாக திரிந்து மிதக்கும்.

* இதுவே சைனீஸ் சிக்கன் சூப். சூடாக அருந்த சுவையாக இருக்கும்.
51

Related posts

முருங்கைக்காய் சூப்

nathan

நாட்டுக்கோழி ரசம்

nathan

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

சூப்பரான இறால் – காய்கறி சூப்

nathan

சத்தான வாழைத்தண்டு – பார்லி சூப்

nathan

சுவையான சத்தான வாழைத்தண்டு சூப்

nathan

கொண்டைக்கடலை சூப்

nathan

உடல் பலவீனமானவர்கள் வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

nathan

பசியை தூண்டும் மூலிகை சூப்

nathan