24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld356
மருத்துவ குறிப்பு

பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்

கசப்பு என்பதால் பாகற்காயைத் தொடாத பெண்களா நீங்க? இனி, மாறுங்க. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் கடந்த 1982ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அல்சர் ஆகிய நோய்களை பாகற்காய் கட்டுப்படுத்தும் என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் நோய் இயல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரத்னா ராய், மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் பாகற்காயின் பங்கு குறித்து ஆய்வு செய்தார். இதன் முடிவுகள் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் சாறு வழங்கப்பட்டது.

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்ததில் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை கொல்வதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. மேலும், இந்த செல்கள் வளர்ச்சி அடைவதைத் தடுக்க உதவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

”பெண்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கவும் அதன் வேகமான வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும்” என ரத்னா ராய் தெரிவித்துள்ளார்.

”பெண்களை பலிவாங்கும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான இந்த ஆராய்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், மேலும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என கொலராடோ பல்கலைக்கழகத்தின் மருந்து அறிவியல் துறை பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ld356

Related posts

திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைக்கிறார்கள்

nathan

வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட இந்த ஒரே முலிகை போதும்!இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!

nathan

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழைப்பழம்!

nathan

குழந்தை ஆரோக்கியமாக‍ பிறக்க‍ கணவன் மனைவிக்கான முக்கிய ஆலோசனைகள்

nathan

அவசியம் படிக்க..சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் ஆயுர்வேத மருந்துகள்!

nathan

120 நாட்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கு

nathan

இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

nathan