29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
511163164 lackofheartbeat
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கருவில் உள்ள குழந்தைக்கு ஏதோ குறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

குழந்தைகள் இயற்கையிலேயே மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள் முக்கியமாக பிறந்த பச்சிலம் குழந்தைகள் தான். அவர்கள் தங்களை சுற்றி நடக்கும் சூழ்நிலை மாற்றங்களால் எளிதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இது அனைத்து குழந்தைகளுக்குமே சில வருடங்கள் வரை சில பாதிப்புகளை உண்டாக்க கூடியது. குழந்தைகள் உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டால் அவர்களது உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளை வைத்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கலாம். ஆனால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றால் எப்படி அறிவது?

 

குழந்தையின் உடல்நல சரியில்லை என்றால் அதன் அறிகுறிகள் கருவை சுமக்கும் தாயின் மூலமாக வெளிப்படும். ஒருவேளை உங்களது கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இல்லை என்றால் அதனை இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் 14 அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

1. இருதய துடிப்பு குறைதல்

குழந்தைகளின் இதயம் ஐந்து வார கர்ப்பத்தில் துடிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் இதனை எளிதாக கண்டுபிடிப்பது 10 ஆவது வாரத்தில் தான் முடியும். இதயத்துடிப்பை அதற்கு முன் நீங்கள் முதலாவது பருவ காலத்தில் கண்டுபிடிக்கலாம். சில சமயங்களில் குழந்தைகளின் இருதய துடிப்பை கண்டறிய முடியாது. இதற்கு குழந்தைகளின் இடம் மாறுவது கரணமாக இருக்கலாம். அல்லது கர்ப்பப்பை குழந்தைக்கு அழுத்தம் தருவதாக கூட இருக்கலாம். இது போன்ற சூழ்நிலையில் இருதய துடிப்புகள் குறைவதை அறிந்தால் மருத்துவ பரிசோதனை அவசியமாகும்.

2. கர்பப்பை உயரம்

கர்ப்பப்பை உயரம் என்பது அந்தரங்க எழும்பில் இருந்து கருப்பப்பையின் உயரம் ஆகும். கருப்பப்பை சிசு வளரும் போது அதனுடன் சேர்ந்து வளரும். அவ்வாறு இதன் உயரத்தை அளவிட முடியவில்லை என்றால் சிசுவானது கருப்பையை விட்டு தள்ளி வளருகிறது என்று அர்த்தமாகும். இதற்கான பரிசோதனைகளை மருத்துர்கள் எடுப்பார்கள்.

3. IUGR நோய் கண்டறிதல்

IUGR என்ற பரிசோதனையானது குழந்தைகளின் உடலில் உள்ள பாகங்கள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்டறிய செய்யப்படும் பரிசோதனையாகும். இந்த பரிசோதனையை முங்கூட்டியே மருத்துவர்கள் செய்வதன் மூலமாக ஏதாவது பிரச்சனை என்றால் அதனை கருவிலேயே சரி செய்துவிடுவார்கள்.

4. குறைவான HCG அளவுகள்

HCG அளவானது உடலில் உள்ள ஹார்மோன்களின் ஆரோக்கியத்தை கணக்கிடும் முறையாகும். இந்த ஹார்மோன் ஆனது கருவுற்ற பிறகு கருமுட்டையை பாதுகாக்கும் பணியை செய்கிறது. இந்த பரிசோதனை இரத்தத்தின் மூலமாக செய்யப்படும். இந்த HCG அளவானது கர்ப்பத்தின் 8 முதல் 11 வாரத்தில் அதிகமாக இருக்கும். அப்போது தான் இந்த பரிசோதனையை செய்வார்கள். இது 5 mIU/ml க்கும் குறைவாக இருந்தால் குறைபிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாகும்.

5. அதிகமான தசைப்பிடிப்பு

இது கர்ப்பத்தின் எந்த மாதத்தில் வேண்டுமானலும் நடக்கலாம். ஒரு புறம் மட்டுமே அதிகமான தசைப்பிடிப்புடன் இரத்தப்போக்கும் உண்டானால் இதனை உடனடியாக பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

6. இரத்தப்போக்கு

கர்ப்ப காலத்தில் வெஜினா பகுதியில் இருந்து இரத்தப்போக்கு உண்டாவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும். ஒரு சிறு துளி இரத்த கசிவு உண்டானாலும் கூட உடனடியாக பரிசோதனை செய்து உங்களது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது கருக்கலைந்து போவது, ஹார்மோனல் உதிரப்போக்கு போன்றவையால் கூட இருக்கலாம்.

7. இடுப்பு வலி

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி வருவது சாதாரணமான ஒன்று தான். இதனால் முதுகு தண்டில் வலி உண்டாகும். முக்கியமாக கீழ் இடுப்பு பகுதியில் வலி உண்டாகும். இந்த வலியானது மிக நீண்ட நாட்கள் நீடித்து இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு உண்டாக வாய்ப்புள்ளது.

8. வெஜினா திரவம்

வெஜினாவில் இருந்து திரவம் வெளிப்படுவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் வெஜினா திரவம் பொதுவாக க்ளியராகவும், டிராண்ஸ்பரண்டாகவும், கலர் இல்லாமலும் தான் இருக்கும். ஆனால் அசாதாரண நிலையானது அதிகமான நாற்றம், இரத்தம், அல்லது வலியை உண்டாக்குவதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் மருத்துவரை நாடுவது சிறப்பு. இது கருக்கலைந்து போக ஒரு காரணமாகவும் அமைந்துவிடும்.fetus nose wrinkle

9. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

சிசுவின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை பற்றி அறிய இந்த அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பயன்படுகிறது. இது சிசுவின் அளவு, எடை, அசைவுகள், இரத்த ஓட்டம், இருதய துடிப்பு போன்றவற்றை பரிசோதனை செய்கிறது. இந்த ஸ்கேன் முடிவு சரியாக இல்லை என்றால் உடனடியாக மருத்துவரிடன் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

10. கர்ப்ப பரிசோதனை

இப்போது எல்லாம் வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. உங்களது மாதவிடாய் தள்ளிப்போனால் கடைகளில் கிடைக்கும் பிரசவ பரிசோதனை கிட் மூலமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். இருப்பினும் மருத்துவரிடன் சென்றும் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். ஆனால் நீங்கள் கர்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டும் கூட உங்களது கர்ப்ப பரிசோதனை கிட்டில் திரும்ப திரும்ப ரிசல்ட் நேகட்டிவ்வாக வந்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

11. சிசுவின் அசைவு இல்லையா?

குழந்தையின் அசைவை நீங்கள் 18 வாரங்களில் நன்றாகவே உணர முடியும். 24 வாரங்களில் இன்னும் நன்றாக உணரலாம். இப்போது தான் கர்ப்பிணி பெண்கள் தங்களது குழந்தை உதைப்பதால் தாய் மகிழ்ச்சியடைவாள். ஆனால் உங்கள் குழந்தையின் அசைவை உங்களால் உணர முடியவில்லையா? இரண்டு மணிநேரத்தில் ஒரு தாய் குழந்தையின் 10 உதைகளை வாங்குவாள் எனப்படுகிறது. இது ஆரோக்கியமான குழந்தையின் அடையாளமாகும். இந்த அசைவுகள் குறைவாக இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்து தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

12. காலையில் காய்ச்சலாக இருப்பது

கர்ப்ப காலத்தில் காலையில் காய்ச்சலாக இருப்பது என்பது அனைவரும் நடக்க கூடியது தான். ஆனால் இது முதல் மூன்று மாதங்களில் சரியாகிவிடும். இது குழந்தை கருவில் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் குறைவான HCG அளவுடன் சேர்த்து உங்களுக்கு காய்ச்சலும் தொடர்ந்து வந்தால் இது கருக்கலைய போவதன் ஆரம்ப அறிகுறியாகும். எனவே இது போன்ற நிலையிருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

13. மார்பகம் சிறிதாவது

கர்ப்ப காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். மார்பக பகுதியில் இது மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் மார்பகம் மிகவும் சென்சிடிவ்வான ஒரு இடமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெரியதாகும், எடையுடன் கூடிய மார்பகங்கள் குழந்தை நன்றாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும். ஆனால் மார்பகங்கள் சிறிதாவது போன்று உணர்ந்தால் நீங்கள் மருத்துவரை அணுகவும். இது கருக்கலைவுக்கு காரணமாக கூட இருக்கலாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

nathan

அறுபதிலும் ஆரோக்கியமாக வாழ 6 வழிமுறைகள்

nathan

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்ற மிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா?

nathan

இளமையை காக்கும் துளசி…இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

nathan

அதிகரிக்கும் தற்கொலைகள்… காரணமாகும் மனஅழுத்தம்… விரட்டியடிக்கும் திறவுகோல் எது?

nathan

இரண்டாம் முறையாக கர்ப்பமடைந்த விஷயத்தை முதல் குழந்தையிடம் எவ்வாறு பகிர வேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு

nathan

ஆய்வில் அதிர்ச்சி! சிசு வளர்ச்சியை பாதிக்கும் பாரசிட்டமால் …

nathan