23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
0 acidity
மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியங்கள்!!!

ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது அசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம். பொதுவாக நம் உடலில் உண்ணும் உணவை செரிக்க இரைப்பையில் அமிலம் ஒன்று சுரக்க உதவும். ஆனால் அந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, வயிற்றில் எரிச்சலுடன் கூடிய வலியை சந்திக்கக்கூடும். மேலும் அந்த வலியானது வயிற்றில் மட்டுமின்றி, அப்படியே மேலே ஏறி நெஞ்சில் எரிச்சலையும், வலியையும் ஏற்படுத்தும். மேலும் அடிவயிற்றில் கடுமையான பிடிப்பு ஏற்பட்டு, கடும் தொல்லையாக இருக்கும்.

ஆகவே அசிடிட்டி இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால், அப்போது மருந்து மாத்திரைகளின் உதவியை நாடி சார்ந்து இருக்காமல், அதற்கான இயற்கை கை வைத்தியங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை முயற்சிக்க வேண்டும். இங்கு அசிடிட்டிக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

துளசி

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, அசிடிட்டியை மட்டுமின்றி, குமட்டல் மற்றும் வாய்வு தொல்லையில் இருந்தும் நிவாரணம் தரும். அதற்கு தினமும் துளசியை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது அதனைக் கொண்டு டீ தயாரித்து தேன் கலந்து குடிக்கலாம்.

வெல்லம்

தினமும் உணவை உட்ககொண்ட பின்னர், ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பட்டை

பட்டையில் நிறைந்துள்ள ஆன்டாசிட் தன்மையினால், அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதற்கு பட்டையை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி டீ போன்று தயாரித்துக் குடிக்கலாம்.

சோம்பு

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து குடித்து வர வேண்டும். மேலும் இந்த நீரை தினமும் மூன்று முறை குடித்து வர வேண்டும்.

இஞ்சி

இஞ்சியில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அசிடிட்டி பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் இஞ்சி, வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமன்செய்யும். எனவே இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்தோ அல்லது இஞ்சியை உப்பில் தொட்டு வாயில் போட்டு மென்று வர வேண்டும். இதன் மூலம் அசிடிட்டியை குணமாக்கலாம்.

தண்ணீர் குடிக்கவும்

அசிடிட்டிக்கான மிகவும் சிம்பிளான சிகிச்சை என்றால், அது தண்ணீர் அதிகம் குடிப்பது தான். அதிலும் தினமும் 10-12 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். அதிலும் வெதுவெதுப்பான நீரென்றால், இன்னும் சிறந்தது.

மோர்

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தோர் குடித்து வந்தால், அதில் உள்ள லாக்டிக் ஆசிட், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் மோருடன் சிறிது மிளகு மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்லது.

கிராம்பு மற்றும் ஏலக்காய்

ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் கிராம்பு மற்றும் ஏலக்காயை சிறிது எடுத்துமு வந்தால், அது விரைவில் அசிடிட்டி பிரச்சனைக்கு தீர்வு தரும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் உள்ளது. இது அசிடிட்டி பிரச்சனைக்கு நல்ல தீர்வு தரும். எனவே 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்சனை நீங்கும்.

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! திருமணம்… கர்ப்பம்… வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…யோனி வெளியேற்றத்தின்போது ஏன் உங்க உள்ளாடையின் நிறம் மாறுது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஈஸ்ட் வளர்ச்சி அபரீதமாக இருப்பதற்கான 10 அறிகுறிகளும்… அதனை சமாளிப்பதற்கான வழிகளும்…

nathan

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை எப்படி தடுக்கலாம்?

nathan

ஹார்மோன் கோளாறால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரிசெய்ய என்ன பண்ணனும் தெரியுமா?

nathan

சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி- செய்யக்கூடாதவை…செய்யவேண்டியவை…

nathan

பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..

nathan

இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!! மூட்டு வலியை போக்கும் முத்தான 4 பயிற்சிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…விலகிப் போன முதுகெலும்பில் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு பயனுள்ள ஆசனம்!

nathan