இலங்கை சிங்கள மக்களின் உணவு முறை சற்று வித்தியாசமாக இருக்கும்.
பெரும்பாலும் அவர்கள் விஷேச நாட்களில் உண்ணும் உணவுகளில் ஒன்று தான் பால் சோறு.
இதனை கட்ட சம்பலுடன் சாப்பிடும் போது சுவை அதிகம்.
இன்று இலங்கையில் சிங்களவர் விரும்பி உண்ணும் பால் சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி – 2 கப்
தேங்காய் – அரை மூடி
உப்பு
செய்முறை
தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து சூடேறியவுடன் தேங்காய்ப் பால் உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.
கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
பால் சோறு தயார். தட்டில் கொட்டி சதுர வடிவில் வெட்டி சாப்பிடலாம். சுவையை அதிகரிக்க காரமான கட்ட சம்பலுடன் சுவையுங்கள்… வாழ் நாளில் மறக்க மாட்டீர்கள்.