28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
ladies finger sambar
​பொதுவானவை

சுவையான வெண்டைக்காய் சாம்பார்

வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்கு போடலாம் என்று சொல்வார்கள். ஏனெனில் வெண்டைக்காயில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. அத்தகைய வெண்டைக்காயை சிலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும், சிலருக்கோ சாம்பார் வைத்து சாப்பிட பிடிக்கும். இங்கு வெண்டைக்காய் சாம்பாரை மிகவும் சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். குறிப்பாக இந்த ரெசிபியானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.

Ladies Finger Sambar
தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 15 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 2

செய்முறை:

முதலில் குக்கரில் துவரம் பருப்பைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து 5-7 நிமிடம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி, பின் அதில் தக்காளி, புளிச்சாறு, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

வெண்டைக்காயானது நன்கு வெந்துவிட்டால், அதில் பருப்பை கடைந்து சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கி, அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து இறக்கி, சாம்பாரில் சேர்த்தால், வெண்டைக்காய் சாம்பார் ரெடி!!!

Related posts

நீங்கள் இல்லத்தரசியா? உங்களுக்கான பயனுள்ள தகவல்கள்

nathan

ஓம பொடி

nathan

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

nathan

திருமணம் ஆகப்போகும் பெண்ணுக்கு தாய் கூறும் அறிவுரைகள்

nathan

ஸ்வீட் கார்ன் புலாவ்

nathan

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க

nathan

தமிழ் மொழியில் பழங்களின் பெயர்

nathan

சுவையான மாங்காய் ரசம்

nathan

பூண்டு பொடி

nathan