இலங்கையில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று கோதுமை மாவில் செய்யப்படும் போல் ரொட்டி.
இந்த போல் ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும்.
தற்போது போல் ரொட்டியை எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
தண்ணீர், தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், கோதுமை மாவுடன் உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமாக தட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தட்டி ரொட்டியை போடவும்.
இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்தால் சுடச் சுட போல் ரொட்டி தயார்.