தேவையான பொருட்கள்
பொரி – 2 கப்
பொட்டுக்கடலை – 1/2 கப்
கறிவேப்பிலை – 20
மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
பூண்டு பல் – 6
உப்பு – தேவையான அளவு
வறுத்த வேர்க்கடலை – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, தட்டிய பூண்டு, வேர்க்கடலை, மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை வதக்கி கொள்ளவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் பொரி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு அந்த கடாய் சூட்டிலேயே நன்கு கலந்துவிட வேண்டும். அவ்வளவு தான் எளிய முறையில் சுவையான மசாலா பொரி தயார்.