கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு முக்கியமான ஒன்று. இந்த காலத்தில் பெண் சாப்பிடும் உணவு மற்றும் பெண்ணின் வாழ்க்கை முறை தான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.
அதன்படி, கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி குழந்தைக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பற்றி இந்த பகுதியில் காண்போம்.
இனிப்பு உணவுகள்
அதிக இனிப்பு கலந்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பை 38 சதவிகிதம் அதிகரிக்கிறதாம். மேலும், அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பை 73 சதவிகிதம் அதிகரிக்கிறதாம். அதுமட்டுமின்றி 101 சதவிகிதம் அலர்ஜிக் ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாம்.
ஆய்வு
இது பற்றிய ஆய்வு 9,000 தாய் மற்றும் குழந்தைகளிடையே நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது கர்ப்ப காலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு அலர்ஜிக் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு அதிகம் என கூறுகிறது
குறைவான இனிப்பும் கூடாது
அதற்காக குறைவான அளவு இனிப்பும் சாப்பிட கூடாது. குறைவான இனிப்பு சாப்பிடுவதால் வீசிங், நுரையிரல் குறைபாடுகள் குழந்தைகளின் 7 முதல் 9 வயதில் உண்டாகிறது.
பல ஆராய்ச்சிகள்
இது பற்றி நடந்த பல ஆராய்ச்சிகளும் ஒரே மாதிரியான கருத்துகளை தான் தெரிவிக்கின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் மிக அதிக அளவு இனிப்பையும் எடுத்துக்கொள்ளாமல், மிக குறைந்த அளவு இனிப்பையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது சிறந்தது.