உங்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போகிறது என்ற கவலை இருக்கிறதா? உடனடியாக கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற பரிசோதனையை எடுங்கள். கர்ப்பாக இருந்தால் மாதவிடாய் ஏற்படாது. எனவே மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்ப பரிசோதனை எடுத்துக்கொள்வது அவசியம்.
Late periods problems you should consult doctor
ஒருவேளை நீங்கள் கர்ப்பமாக இல்லை, உடலுறவில் ஈடுபடுபவராக இல்ல என்றால், மாதவிடாய் ஏற்படாமல் இருக்க, கர்ப்பத்தை தவிர வேறு சில காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் பிரச்சனைகள், உடல் எடை அதிகரிப்பு, சில வகையான மருந்துகள் மாதவிடாய் வரமால் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
பிறப்பு கட்டுப்பாடு:
நீங்கள் பிறப்பு கட்டுப்பாடு முறையை கடைபிடிக்கும் போது மூன்று மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டியது அவசியம்.
ஆறு மாதத்திற்கு மேல்
நீங்கள் ஆறு மாதத்திற்கு மேலாக உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால், நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியம்.
நீண்ட நாட்கள்
உங்களுக்கு மாதவிடாய் முறையாக ஏற்பட்டாலும், அது ஆறு நாட்கள் எட்டு நாட்கள் என நீடித்துக்கொண்டிருந்தாலும் கால விரயம் செய்யாமல் மருத்துவரிடம் செல்லுங்கள்.
ஒரே நாள்
மாதவிடாய் நீண்ட நாட்கள் ஏற்படுவது எப்படி பிரச்சனையோ அதே போல தான் ஒரே ஒரு நாள் மட்டும் ஏற்படுவதும், இந்த பிரச்சனை இருந்தாலும் மருத்துவரிடம் செல்லுங்கள்.
மாதவிடாய் அளவு
உங்களுக்கு குறிப்பிட்ட அளவை விட அதிக அளவு இரத்த போக்கு ஏற்பட்டாலும், மிக குறைந்த அளவு ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.