25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
0 8 warm lemon juice
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம் என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் வேறுசில நன்மைகளையும் பெறலாம்.

இங்கு அதில் சில பட்டியலிடப்பட்டுள்ளன. இப்படி எலுமிச்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைக்கு காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் தான் முக்கிய காரணம். சரி, இப்போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால், அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

செரிமான மண்டலத்திற்கு உதவும்

அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமானம் சீரா நடைபெற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவது குறைந்து, நச்சுக்கள் எவ்வித தடையுமின்றி வெளியேறும்.

கல்லீரல் சுத்தமாகும்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகள் சீராக இயங்குவதற்கு உதவும். அதுமட்டுமின்றி, அது கல்லீரலில் நச்சுக்கள் தங்குவதையும் தடுக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் அதில் உள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

சருமத்தை சுத்தமாக்கும்

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்கும். அதிலும் எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால், அது இரத்த நாளங்களில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வெளிக்காட்டும்.

வாய் துர்நாற்றம்

எலுமிச்சை ஜூஸ் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

எடையைக் குறைக்கும்

வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, அதிக அளவில் உணவை உட்கொள்ள முடியாதவாறு செய்து, உடல் எடையை விரைவில் குறைக்கும்.

அளவுக்கு அதிகமான எலுமிச்சை வேண்டாம்

எலுமிச்சையை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் ஒரு எலுமிச்சையின் மூலம் 2 கிலோ எடையைக் குறைக்கலாம். ஆனால் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்று ஒரு டம்ளரில் 4 எலுமிச்சையை பிழிந்து ஜூஸ் போட்டு குடித்தால், எவ்வித மாற்றமும் தெரியாது. மாறாக பற்களின் எனாமல் தன் பாதிக்கப்படும்.

குறிப்பு

எப்போது எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னரும் வாயை குளிர்ந்த நீரால் கொப்பளிக்க வேண்டும்.

Related posts

ஆல்கஹாலில் வயாகரா கலந்து குடித்தால் என்னவாகும் என்று தெரியுமா? சீனர்களை கேளுங்கள்!!!

nathan

40 வயதை அடைந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்

nathan

உங்களுக்கு தொியுமா ? எந்தவொரு நச்சு கூறுகளையும் உடலிலிருந்து அடித்து விரட்டும் இயற்கை பானம்!

nathan

உங்களுக்கு கோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க…

nathan

நிமோனியாவை தடுத்து நிறுத்துவோம்!

nathan

சூப்பரான கை வைத்தியம்!

nathan

வயது அடிப்படையில் பெண்களுக்கு குழந்தைப்பேறு குறையும் காலகட்டங்கள்

nathan

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

nathan

தலைவலி, கடுஞ்சளி, வாயுத்தொல்லை நிவாரணம் தரும் சுக்கு

nathan